“லியோ” திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி திரைக்கு வர உள்ள நிலையில் இத்திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு மிக அதிக அளவில் உள்ளது. லோகேஷ் கனகராஜ் இதற்கு முன்பு இயக்கிய “விக்ரம்” திரைப்படம் LCUக்குள் வந்த நிலையில், “லியோ” திரைப்படம் LCUக்குள் வருமா? வராதா? என்ற சந்தேகம் பல ரசிகர்களை வாட்டிக்கொண்டிருக்கிறது.

ஆனால் படம் வெளியாகும்போதுதான் “லியோ” திரைப்படம் LCU ஆ? இல்லையா? என்பது குறித்து தெரிய வரும். ஒரு வேளை “லியோ” திரைப்படம் LCU என்று உறுதியானால் ரசிகர்களின் உற்சாகம் எல்லை மீறிப்போய்விடும் என்பது நிதர்சனம்.
இந்த நிலையில் நேற்று சமூக வலைத்தளங்களில் திடீரென “லியோ” திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளிவருகிறது எனவும் அதில் இரண்டாம் பாகம் 2025 அல்லது 2026 ஆம் ஆண்டு வெளிவரும் எனவும் தகவல்கள் பரவின. இவ்வாறு வைரல் ஆன தகவலால் ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்தனர்.

இந்த நிலையில் தற்போது இந்த செய்தி குறித்த உண்மைத் தன்மை வெளிவந்துள்ளது. அதாவது “லியோ” படக்குழுவினரிடம் இரண்டாம் பாகத்திற்கான திட்டம் எதுவும் இல்லையாம்.
ஆனால் “லியோ” திரைப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சி முடிந்த பிறகு இரண்டாம் பாகத்திற்கு ஒரு லீட் கொடுத்திருக்கிறார்களாம். ஒரு வேளை “லியோ” மிகப் பெரிய வெற்றிப்படமாக அமைந்தால் பின்னாளில் “லியோ” திரைப்படத்தின் பார்ட் 2 உருவாக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இப்போது வரை இரண்டாம் பாகத்திற்கான எந்த ஐடியாவும் படக்குழுவினரிடம் இல்லை என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே “கைதி 2” திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டு வரும் நிலையில் தற்போது “லியோ 2” உருவாக உள்ளதாக வெளிவந்த செய்தி ரசிகர்களை சற்று குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.





