- Advertisement -
Homeபொழுதுபோக்குபொங்கல் ரிலீஸ்க்கு தள்ளி போகிறதா விடாமுயற்சி? அப்போ ரஜினி, அஜீத் அந்த படங்களில் மோதிக்கொள்வது உறுதி...

பொங்கல் ரிலீஸ்க்கு தள்ளி போகிறதா விடாமுயற்சி? அப்போ ரஜினி, அஜீத் அந்த படங்களில் மோதிக்கொள்வது உறுதி – மாட்டிவிட்ட டைரக்டர் மகிழ் திருமேனி

- Advertisement -

லைகா புரடக்சன்ஸ் தயாரிப்பில், இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜீத்குமார் நடிப்பில் உருவாகி வரும் படம் விடாமுயற்சி. கடந்த ஆண்டு அக்டோபர் 4ம் தேதி, அஜர்பைஜானில் துவங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு, இம்மாதம் 16ம் தேதி நிறைவடைந்துள்ளது. இன்னும் ஒரு பாடல் காட்சி, சில பேட்ச் ஒர்க் காட்சிகள் எடுக்கப்பட உள்ளது.

விடாமுயற்சி படத்தை வருகிற தீபாவளிக்கு அக்டோபர் 31ம் தேதி வெளியிட லைகா புரடக்சன்ஸ் நிறுவனம் முடிவு செய்திருந்தது. ஏனெனில் விடாமுயற்சி படத்தை விலைக்கு வாங்கியுள்ள நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் தீபாவளிக்கு படம் ரிலீஸ் செய்தால், நாங்கள் கேட்ட விலைக்கு படத்தை வாங்கிக்கொள்கிறோம்.

- Advertisement -

ஒருவேளை படத்தை ரிலீஸ் ஆக இன்னும் கூடுதல் கால அவகாசம் தேவைப்படும் என்றால், விடாமுயற்சி படம் எங்களுக்கு வேண்டாம் என்று திட்டவட்டமாக கூறியிருக்கிறது. ஏனெனில் விடாமுயற்சி படப்பிடிப்பு துவங்குவதற்கு பல மாதங்களுக்கு முன்பே இந்த படத்தை நெட்பிளிக்ஸ் விலை பேசி வாங்குவதாக ஒப்பந்தம் செய்துள்ளது.

ஆனால் விடாமுயற்சி படத்தின் இயக்குனர் மகிழ்திருமேனி, இன்னும் போஸ்ட் புரடக்சன்ஸ் பணிகள் இருப்பதால், பாடல் காட்சி, பேட்ச் ஒர்க் காட்சிகளும் எடுக்க வேண்டி இருப்பதால், என்னை தொந்தரவு செய்து நெருக்கடி தராதீர்கள் என்று தயாரிப்பு நிறுவனத்திடம் கூறியிருக்கிறார். அதனால் தீபாவளிக்குள் அவர் படத்தை ரெடி செய்து தரப்போவதில்லை என்பது தெளிவாகி விட்டது.

- Advertisement -

அதனால், விடாமுயற்சி தீபாவளிக்கு ரிலீஸ் ஆகவில்லை என்றால் அடுத்து கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு டிசம்பர் 20ம் தேதிக்கு பிறகு ரிலீஸ் ஆக வாய்ப்புள்ளது. அப்போதும் ரிலீஸ் ஆகாத பட்சத்தில் 2025ம் ஆண்டில் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு தான் ரிலீஸ் ஆகும் என்பது உறுதியாகி விட்டது.

அப்படி விடாமுயற்சி வரும் பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆகும் பட்சத்தில் அப்போது ரிலீஸ் ஆக திட்டமிட்டுள்ள ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் குட்பேட் அக்லி படம், ஏப்ரல் 14ம் தேதி தமிழ் புத்தாண்டுக்கு ரிலீஸ் ஆகும். அப்போது ரஜினியின் கூலி படமும் ரிலீஸாகும் என்பதால் அந்த இரண்டு படங்களும் களத்தில் மோதும் வாய்ப்பு உருவாகும் எனத் தெரிகிறது.

- Advertisement -

சற்று முன்