- Advertisement -
Homeபொழுதுபோக்குஅது நடக்காமல் போனது எனக்கு வருத்தம்தான், அந்த விஷயம் எனக்கு கிடைக்கலே - சமுத்திரக்கனி படம்...

அது நடக்காமல் போனது எனக்கு வருத்தம்தான், அந்த விஷயம் எனக்கு கிடைக்கலே – சமுத்திரக்கனி படம் குறித்து ஓபனாக பேசிய இயக்குனர் சேரன்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குனர் சேரன். இயக்குனர் கேஎஸ் ரவிக்குமாரிடம் உதவி இயக்குனராக பல படங்களில் பணிசெய்த அவர் பாரதி கண்ணம்மா படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். பார்த்திபன் மீனா வடிவேலு விஜயகுமார் ராஜா ரஞ்சித் உள்ளிட்டோர் நடித்த இந்த படம் மாபெரும் வெற்றியை பெற்றது.

இதை தொடர்ந்து பொற்காலம் தேசியகீதம் வெற்றிக்கொடி கட்டு தவமாய் தவமிருந்து ஆட்டோகிராப் மாய கண்ணாடி பொக்கிஷம் என பல படங்களை இயக்கிய சேரன் அவரது படங்களில் நாயகனாக நடித்தார். அதே வேளையில் சொல்ல மறந்த கதை பிரிவோம் சந்திப்போம் ராமன் தேடிய சீதை என பிற இயக்குனர்களின் படங்களிலும் சேரன் நடித்தார்.

- Advertisement -

இயக்குனர் சமுத்திரக்கனி இயக்கத்தில் கடந்த 2009ம் ஆண்டில் வெளியான படம் நாடோடிகள். சசிக்குமார் இயக்குனராக அறிமுகமான சுப்ரமணியபுரம் படத்தில் சமுத்திரக்கனி வில்லனாக நடித்திருந்தார். அடுத்து சமுத்திரக்கனி இயக்கிய நாடோடிகள் படத்தில் சசிக்குமார் நாயகனாக நடித்திருந்தார்.

இந்த படத்தில் சசிக்குமாருடன் அனன்யா அபிநயா லட்சுமி ராமகிருஷ்ணன் வசந்த் விஜய் பரணி கஞ்சா கருப்பு ராஜா ஜெயப்பிரகாஷ் பாரதி உள்ளிட்டோரும் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர். வீட்டை விட்டு ஓடிவரும் இளம் காதலர்களை சேர்த்து வைக்கும் நண்பர்கள் படும் துன்பங்களை சொல்லும் படமாக இது பெரிய வரவேற்பை வெற்றியை பெற்றது.

- Advertisement -

சமீபத்தில் நாடோடிகள் படம் குறித்து இயக்குனர் மற்றும் நடிகர் சேரன் பேசியிருக்கிறார். அவர் கூறியதாவது, நாடோடிகள் எனக்குச் சொன்ன கதை. அந்தப் படத்தை நாங்க டிஸ்கஸ் பண்ணி பண்ணனும் என்று நினைத்தோம். அப்பத்தான் சுப்பிரமணியபுரம் படம் ரிலீஸ் ஆகுது.

தம்பி சசிகுமாரோட நடிப்பு எல்லாருக்கும் பிடிக்க ஆரம்பித்து அந்த படம் சமுத்திரக்கனி கிட்ட போகும்போது அந்த படத்தை அவங்க பண்ணினாங்க. அந்த படம் ஹிட் ஆச்சு. அது அவங்க பண்ணிய தப்பு கிடையாது. அவங்களுக்கு அந்த டைம்ல அது கரெக்டாக அமைந்தது, அவங்க பண்ணிட்டாங்க. எனக்கு அது கிடைக்கலையே என்கிற ஒரு வருத்தம் இருக்குது என்று நடிகர் சேரன் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்