- Advertisement -
Homeபொழுதுபோக்குநவம்பர் 1 முதல் முழு வேலை நிறுத்தம்; இந்த அதிரடி முடிவுக்கு காரணமே அவர்கள்தான் -...

நவம்பர் 1 முதல் முழு வேலை நிறுத்தம்; இந்த அதிரடி முடிவுக்கு காரணமே அவர்கள்தான் – நெருக்கடி தந்து சினிமாவை காப்பாற்ற முயற்சிக்கிறதா தயாரிப்பாளர் சங்கம்?

- Advertisement -

ஒரு படம் உருவாவதில் அடிப்படையில் ஆணிவேராக இருப்பது அந்த படத்தின் தயாரிப்பாளர்தான். நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என மூன்று பேரின் கூட்டணிதான் ஒரு படம் உருவாக காரணமாகிறது. அதன்பிறகு பலவிதமான தொழில்நுட்ப கலைஞர்கள், இசையமைப்பாளர்கள், நடிகைகள், துணை நடிகர் என பல விஷயங்கள் இதில் இணைகின்றன.

முன்பெல்லாம் தயாரிப்பாளர்களை தான் இயக்குனர்களும், ஹீரோ நடிகர்களும் கடவுளாக பார்ப்பார்கள். ஏனெனில் பல கோடி ரூபாய்களை சினிமாவில் முதலீடு செய்யும் அவர்களால்தான் படங்களை இயக்க முடிகிறது, அதில் நடிகர்கள் நடிக்க முடிகிறது, தியேட்டர்களில் அந்த படங்கள் வெள்ளி விழா கொண்டாடி, இயக்குனர் நடிகர்களுக்கு அடுத்த படங்களுக்கான வாய்ப்பை தேடித் தருகிறது.

ஆனால் இப்போதெல்லாம் நடிகர்கள், இயக்குனர்களை நம்பி அவர்களது தயவில்தான் தயாரிப்பாளர்கள் வாழ்கின்றனர் என்பது போன்ற ஒரு மாய தோற்றத்தை ஏற்படுத்தி விட்டனர். பெரிய இயக்குனர், முன்னணி நடிகர் என்று தயாரிப்பாளர்கள் அவர்களது தயவில் படங்களை தயாரிக்க வேண்டிய நிலைமைக்கு மாறியது போன்ற நிலமையை உருவாக்கி விட்டனர்.

அதனால் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜீத்குமார், நயன்தாரா என பல முன்னணி நடிகர்கள், தயாரிப்பாளர்களுக்கு பெரிய நெருக்கடிகளை தருகின்றனர். உதாரணமாக பல கோடிகளை அட்வான்ஸ் ஆக வாங்கிவிட்டு ஆண்டுக்கணக்கில் கால்ஷீட் தராமல் இழுத்தடிக்கின்றனர். விஷால், தனுஷ் போன்றவர்கள் மீது இந்த பஞ்சாயத்து ஓடிக்கொண்டு இருக்கிறது.

அதுமட்டுமின்றி ஒரு படத்தின் மொத்த பட்ஜெட் 200 கோடி ரூபாய் என்றால் அதில் நடிகர் சம்பளம், நடிகை சம்பளம், இசையமைப்பாளர் சம்பளம், டைரக்டர் சம்பளம் என ரூ. 170 கோடியை கொடுத்து மீதி 30 கோடி ரூபாய் பட்ஜெட்டில்தான் படம் உருவாகிறது. அதுமட்டுமின்றி 150 கோடி, 200 கோடி சம்பளம் வாங்கும் ஹீரோக்கள், மொத்த சம்பளத்தையும் படப்பிடிப்பு துவங்கும் முன்பே வாங்கி விடுகின்றனர்.

அதனால் மொத்த பணத்தையும் நடிகர்களுக்கு சம்பளமாக கொடுத்துவிட்டு, படப்பிடிப்பு நடத்த பணம் இல்லாமல், அதிக வட்டிக்கு கடன் வாங்கி படப்பிடிப்பை நடத்தும் நிலைக்கு தயாரிப்பாளர்கள் ஆளாகின்றனர். தவிர 20 ஜிம்பாய்ஸ், 4 மேக்கப் மேன், உதவியாளர், டிரைவர் என பலரது தினசரி சம்பளத்தை தயாரிப்பாளர் தலையில் முன்னணி ஹீரோக்கள் கட்டுகின்றனர். அதனால்தான் இந்த கிடுக்கிப்பிடி நிபந்தனைகளை விதித்து, ஹீரோக்களை கண்ட்ரோலுக்கு கொண்டு வர தயாரிப்பாளர் சங்கம், ஸ்டிரைக் என்ற முடிவை எடுத்துள்ளது.

சற்று முன்