தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடித்தாலும் சில துணை நடிகர்கள் மிகவும் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்துவார்கள். அந்த வகையில் சில நடிகர்கள் பெரிய அளவில் ரசிகர்களிடம் சினிமாவில் பெறாவிட்டாலும் கலைத்துறையில் அவர்களது நடிப்பும் திறமையும் எப்போதுமே நட்சத்திரம் போல பிரகாசித்துக் கொண்டே இருக்கும்.
அந்த வகையில் நடிகர் தலைவாசல் விஜய் ஒரு மிகச் சிறந்த நடிகராக தன்னை வெளிப்படுத்தி வருகிறார். எந்த படத்திலும் அவருக்கு தரப்படும் கேரக்டரில் மிகவும் அற்புதமான தனது அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி விடுவார் என்பது குறிப்பிடத்தக்கது. பல படங்களில் அவர் அப்பா அண்ணன் தம்பி கேரக்டர்களில் நடித்திருக்கிறார்,
சில படங்களில் போலீஸ் டாக்டர் வக்கீல் போன்ற கேரக்டர்களில் அவரது நடிப்பு மிகவும் சிறப்பாக இருக்கும். குறிப்பாக சண்டக்கோழி படத்தில் வில்லன் லால் உடன் சில காட்சிகளில் அவர் இணைந்து நடித்திருப்பார். அந்த நடிப்பு பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றது. அதேபோல் உன்னை நினைத்து படத்தில் கதாநாயகி லைலாவின் அப்பாவாக அவரது நடிப்பு பெரிய அளவில் கவனம் பெற்றது.
இப்படி பல படங்களில் தலைவாசல் விஜய் நடிப்பு ரசிகர்களால் பாராட்டை பெற்று இருக்கிறது. சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற நடிகர் தலைவாசல் விஜய் கூறியதாவது, அமராவதி படத்தில் அஜீத்குமாருடன் நானும் ஒரு கேரக்டரில் நடிச்சேன். அந்த படம் ரிலீஸ் ஆன அன்று நானும் அஜீத் குமாரும் சென்னையில் உள்ள ஒரு தியேட்டருக்கு பைக்கில் போனோம் .
அப்போது அங்க வந்தவங்க சில பேர் என்னை பார்த்து, ஹாய் சார் நல்லா இருக்கீகளா அப்படீன்னு கேட்டு பக்கத்துல வந்து நின்னு நல்லா பேசுனாங்க. என் பக்கத்தில் இருந்து அஜீத்குமாரை அவங்க யாருமே கண்டுக்கல. அப்போ அஜீத் குமார் என்னிடம், என்ன விஜய்? இதுபோல என்னிடமும் மக்கள் வந்து பேசுவாங்களா அப்படின்னு கேட்டார்.
நான் அப்போது சொன்னேன். கண்டிப்பா அஜீத்… ஒரு நாள் இதே ஊர் நீங்க வரும்போது உங்களை பார்க்க ஓடிவரும் பாருங்க அப்படீன்னு சொன்னேன். அது இப்போது உண்மையாகி விட்டது என்று நடிகர் தலைவாசல் விஜய் அந்த நேர்காணலில் மகிழ்ச்சியாக கூறியிருக்கிறார். இப்போது அஜீத்குமார் தமிழ் சினிமாவில் டாப் ஸ்டாராக இருப்பதால் அவர் எங்க சென்றாலும் அவரை காண மக்கள் கட்டம் அலைமோதுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.





