கமல்ஹாசனின் திறமையை குறித்தும் சாதனைகளை குறித்தும் சினிமா ரசிகர்கள் பலரும் அறிந்திருப்பார்கள். கமல்ஹாசன் சிறு வயதிலேயே சினிமாவுக்குள் நுழைந்தவர். அந்த வயதிலும் ஒரு பிசியான குழந்தை நட்சத்திரமாகவே கமல்ஹாசன் வலம் வந்தார். ஜெமினி கணேசன், சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர் ஆகியோருடன் குழந்தை நட்சத்திரமாக நடித்தார் கமல்ஹாசன்.

அதன் பின் கதாநாயகனாக அறிமுகமாகி, பல திரைப்படங்களில் தனது நடிப்பாற்றலை வெளிப்படுத்திய கமல்ஹாசன், ஒரு உச்ச நட்சத்திரமாகவே வளர்ந்தார். ஒரு கட்டத்தில் பல பல வித்தியாசமான கெட்டப்களில் மிகவும் அசால்ட்டாக நடித்து உலகநாயகன் என்ற புகழையும் பெற்றார்.
இந்த நிலையில் பிரபல மருத்துவரான டாக்டர் காந்தராஜ் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “கமல்ஹாசன் ஒரு பிறவி கலைஞன். என்ன விஷயம் என்றால் அவருடைய படங்களில் சில பல அற்புதமான படங்கள் இருக்கின்றன. ஆனால் அதெல்லாம் ஒரு ஆங்கில படத்தில் இருந்து எடுத்ததாக இருக்கும்.

அதனால்தான் அவர் படங்களுக்கு உலக அங்கீகாரம் கிடைக்காமல் போனது. உதாரணத்திற்கு நாயகன் திரைப்படத்தை கூறலாம். கமல்ஹாசன் அந்த படத்தில் அற்புதமாக நடித்திருந்தார். ஆனால் அது காட்ஃபாதர் என்ற ஆங்கில படமாகும்.
காட்ஃபாதர் படத்திற்காக ஏற்கனவே ஆஸ்கர் விருது கொடுத்தாயிற்று. அதையே ஆஸ்கருக்கு அனுப்புகிறார்கள். அதை பார்த்து அவர்கள் சிரிக்கிறார்கள். மார்லன் பிராண்டோ நடித்த அந்த படத்தை தழுவி எடுத்து அதனை ஆஸ்கருக்கு அனுப்பினால் எப்படி.

ஆனால் கமல்ஹாசன் நடித்த பேசும் படம் திரைப்படத்திற்கு ஆஸ்கர் கொடுத்திருக்கலாம். அந்த படத்தில் ஒரு இடத்தில் கூட வசனம் கிடையாது. முழுக்க முழுக்க வசனமே இல்லாத ஒரு படம்” என்று கூறினார்.





