- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்னவெல்லாம் கம்பி கட்டறாங்க பாருங்க… பராசக்தி படத்தில் சூர்யா நடிக்காதது ஏன்? - இயக்குனர் சொன்னதை...

என்னவெல்லாம் கம்பி கட்டறாங்க பாருங்க… பராசக்தி படத்தில் சூர்யா நடிக்காதது ஏன்? – இயக்குனர் சொன்னதை கேட்டு கலாய்க்கும் ரசிகர்கள்!

- Advertisement -

நடிகர் மாதவன் நடித்த இறுதிச்சுற்று, நடிகர் சூர்யா நடித்த சூரரைப் போற்று போன்ற படங்களை இயக்கியவர் சுதா கொங்கரா. அடுத்து சூர்யா நடிப்பில் புறநானூறு என்ற படத்தை சுதா கொங்கரா இயக்க தயாரானார். அந்த படத்தை சூர்யாவின் 2டி நிறுவனமே சொந்தமாக தயாரிக்கவும் முன்வந்தது. மதுரையில் படப்பிடிப்பு துவங்கி நடந்தது.

ஆனால் சில நாட்கள் மதுரையில் நடந்த படப்பிடிப்பில் பங்கேற்ற சூர்யா பிறகு இந்த படத்தில் நடிக்க பிடிக்காமல் வெளியேறி விட்டார். இந்தி திணிப்பு எதிர்ப்பு கதைக்களத்தில் உருவான இந்த படத்தில் நடித்தால் தேவையற்ற பிரச்னைகள் விமர்சனங்கள் வரும் என்பதால் இந்த படத்தில் இருந்து சூர்யா ஒதுங்கி கொண்டதாக அப்போதே தகவல் வெளியானது.

அதன்பிறகு அதே கதையை புறநானூறு என்ற டைட்டிலுக்கு பதிலாக பராசக்தி என்று மாற்றி நடிகர் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்திருக்கிறார். வருகிற ஜனவரி 10ம் தேதி இந்த படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் சமீபத்தில் நேர்காணலில் பேசிய பராசக்தி பட இயக்குனர் சுதா கொங்கரா கூறியதாவது, கொரோனா காலத்தில் சூர்யாவிடம் சொன்ன கதை தான் இது. வெற்றிமாறனின் உதவி இயக்குனர் மதிமாறனும் நானும் நண்பர்கள்.

நாங்கள் அப்போது நிறைய கதைகள் பற்றி பேசினோம். எனக்கு இந்த கதை பிடித்திருந்தது. எனக்கு சூர்யா நண்பர் என்பதால் உடனே அவருக்கு போன் செய்து இந்த கதையை சொன்னேன். அவருக்கும் பிடித்து விட்டது. ஆனால் என்ன நடந்தது என தெரியவில்லை. முக்கியமாக ஒரு பிரச்சனை இருந்தது.

சூர்யாவுக்கு தொடர்ச்சியாக ஷூட்டிங் இருந்தது. அதனால் இந்த படத்தின் ஷூட்டிங்கில் அவர் கலந்துக்கொள்ள முடியவில்லை. ஆனால் தொடர்ச்சியாக சூட்டிங் நடக்கவில்லை என்றால் செலவும் எகிறிவிடும். இதற்கிடையே சிவகார்த்திகேயனுக்கு கதை இருக்கிறதா என தயாரிப்பாளர் அருண் விஸ்வா கேட்டிருந்தார்.

உடனே சிவாவை சந்தித்து இந்த கதையை சொன்னேன். உடனே அவர் தேதி கொடுக்கிறேன். எங்கே கையெழுத்து போட சொன்னாலும் போடுகிறேன் என்று சொல்லி இந்த படத்துக்குள் வந்துவிட்டார் என்று சுதா கூறியிருக்கிறார். எப்படி எல்லாம் கம்பி கட்டறாங்க பாருங்க என்று ரசிகர்கள் இதற்கு கமெண்ட் செய்து வருகின்றனர்.

சற்று முன்