- Advertisement -
Homeபொழுதுபோக்குதமிழ் சினிமாவில் இத்தனை வாரிசு நடிகர் நடிகைகளா? ஒரு மினி கோடம்பாக்கமே இங்குதான் இருக்குதா? -...

தமிழ் சினிமாவில் இத்தனை வாரிசு நடிகர் நடிகைகளா? ஒரு மினி கோடம்பாக்கமே இங்குதான் இருக்குதா? – ஆச்சரியப்படும் ரசிகர்கள்!

- Advertisement -

வாரிசு அரசியல் என்பதை போல தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்கள் நடிகைகளும் மிக அதிகமாக காணப்படுகின்றனர். அதுகுறித்து இப்போது தெரிந்துக்கொள்ளலாம். நடிகர் சிவாஜி கணேசன் மகன் பிரபு, பிரபு மகன் விக்ரம் பிரபு, நடிகர் முத்துராமன் மகன் கார்த்திக், கார்த்திக் மகன் கௌதம் பிரபு, நடிகர் சிவக்குமார் மகன்கள் சூர்யா கார்த்தி இப்போது வாரிசு நடிகர்களாக தமிழ் சினிமாவில் உள்ளனர்.

அதே போல் நடிகர் நாகேஷ் மகன் ஆனந்த் பாபு, நடிகர் கே பாக்யராஜ் மகன் சாந்தணு மகள் சரண்யா பாண்டியராஜன் மகன் பிருத்விராஜ் கமல்ஹாசன் மகள்கள் ஸ்ருதிஹாசன் அக்‌ஷராஹாசன் சத்யராஜ் மகன் சிபிராஜ் விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் விஜய் சேதுபதி மகன் சூர்யா கருணாஸ் மகன் கென் கருணாஸ் ஆகியோர் தமிழ் சினிமாவில் நடித்து வருகின்றனர்.

- Advertisement -

இந்த வரிசையில் நடிகர் அர்ஜூன் மகள் ஐஸ்வர்யா, தம்பி ராமையா மகன் உமாபதி எஸ்ஏ சந்திரசேகர் மகன் விஜய் நடிகை செளகார் ஜானகி பேத்தி வைஷ்ணவி, ராதா மகள் கார்த்திகா நடிகை தேவிகா மகள் கனகா நடிகர் தியாகராஜன் மகன் பிரசாந்த், சியான் விக்ரம் மகன் துருவ் விக்ரம் இயக்குனர் ஷங்கர் மகள் அதிதி ஷங்கர் என வாரிசுகள் படங்களில் நடித்து வருகின்றனர்.

நடிகர் எம்ஆர் ராதா மகள் ராதிகா சரத்குமார், நிரோஷா, ராதாரவி ஆகியோர் நடிகர் எம்ஆர் ராதா மகன் எம்ஆர்ஆர் வாசுவின் மகன் வாசு விக்ரம் வாரிசு நடிகராக உள்ளார். சரத்குமார் மகள் வரலட்சுமி கவர்ச்சி நடிகை அனுராதா மகள் அபிநயாஸ்ரீ நடிகர் இயக்குனர் டி ராஜேந்தர் மகன் சிம்பு இயக்குனர் கஸ்தூரி ராஜா மகன் தனுஷ் மற்றும் செல்வராகவன் வாரிசு நடிகர்களாக உள்ளனர்.

- Advertisement -

அதே போல் மூத்த நடிகர் விஜயகுமாரின் மகன் அருண்விஜய் மற்றும் வனிதா விஜயகுமார் ப்ரீத்தா விஜயகுமார் ஸ்ரீதேவி விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். அதே போல் பாரதிராஜா மகன் மனோஜ்குமார் பழம்பெரும் நடிகர் பாலையா மகன் ஜூனியார் பாலையா ஆகியோர் பல படங்களில் நடித்த நிலையில் மறைந்து விட்டனர். அதே போல் மறைந்த நடிகர் முரளியின் மகன்கள் அதர்வா ஆகாஷ் இருவரும் நடித்து வருகின்றனர்.

மேலும் தெலுங்கில் நடிகர் சிரஞ்சீவி மகன் ராம்சரண் என்டிஆர் மகன் ஜூனியர் என்டிஆர் மலையாளத்தில் நடிகர் மம்முட்டி மகன் துல்கர் சல்மான் வாரிசு நடிகர்களாக உள்ளனர். அதே போல் இந்தியிலும் பல வாரிசு நடிகர் நடிகைகள் களத்தில் உள்ளனர். அதிலும் கோலிவுட்டில்தான் மிக அதிகமாக வாரிசு நடிகர் நடிகைகள் மினி கோடம்பாக்கமே அமைக்கும் அளவில் அதிகமாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்