தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக முக்கிய இடத்தில் இருப்பவர் நடிகர் தனுஷ். இப்போது இயக்குனராகவும் மாறிவிட்டார். அவர் முதன் முறையாக இயக்கிய ப பாண்டி படம் பெரிய வெற்றியை பெற்றது. தொடர்ந்து ராயன் படமும் பெரிய வெற்றியை கொடுத்தது. அடுத்ததாக தனுஷ் இயக்கத்தில் உருவான நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படம் ரிலீஸ் ஆக இருக்கிறது
இப்போது தனுஷ் நடிக்கும் 52 வது படம் இட்லி கடை என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தையும் நடிகர் தனுஷ் டைரக்ட் செய்கிறார். இது நடிகர் தனுஷ் டைரக்ட் செய்யும் 4வது படமாகும். நடிகர் தனுஷை பொருத்தவரை ஆரம்பத்தில் நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து தயாரிப்பாளராகவும் மாறினார். பிறகு பல படங்களில் சொந்த குரலில் பாடவும் செய்தார். பிறகு இயக்குனராகவும் மாறிவிட்டார்.
இப்போது நடிகர் தனுஷ் அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி மிகவும் பிஸியாக இருந்து வருகிறார். சமீபத்தில் அவரது 50வது படம் ராயன் வெளியானது. இந்த படத்தை நடிகர் தனுஷ் டைரக்ட் செய்து ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த ஆண்டில் வெளியான தமிழ் படங்களில் 100 கோடி ரூபாய் வசூலித்த 6 படங்களில் ராயன் படமும் ஒன்றாகும்.
ராயன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இனி டைரக்சனில் அதிக கவனம் செலுத்துவது என்ற முடிவுக்கு வந்துள்ள நடிகர் தனுஷ், தொடர்ந்து படங்களை இயக்குவதில் தீவிரம் காட்டி வருகிறார். 4வதாக தனுஷ் இயக்கும் படத்துக்கு இட்லி கடை என பெயர் வைத்துள்ளார். கடந்த சில வாரங்களாக தேனி மாவட்டத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில், முதல் ஷெட்யூல் நிறைவடைந்துள்ளது.
இதையடுத்து அவர் இயக்கி வரும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தின் ஒரு பாடல் காட்சி மற்றும் ஒரு நாள் படப்பிடிப்பு மீதம் இருப்பதால் அதை முடிக்க உள்ளார். அதைத்தொடர்ந்து சேகர் கம்முலா தெலுங்கு பட இயக்குனர் இயக்கத்தில் குபேரா என்ற படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். இந்த படத்தின் தனுஷுக்கு ஜோடியாக ராஸ்மிகா மந்தனா நடித்திருக்கிறார். இந்த படத்திலும் சில காட்சிகளில் அவர் நடிக்க வேண்டி இருப்பதால், அதிலும் நடித்து முடிக்க தனுஷ் திட்டமிட்டுள்ளார்.
அதைத் தொடர்ந்து இந்தி படம் ஒன்றிலும் கமிட் ஆகியுள்ள தனுஷ், அந்த படத்திலும் நடித்து முடிக்கிறார். பிறகு மீண்டும் தனது 52 வது படம் இட்லி கடை படத்தின் மீதி படப்பிடிப்பை முடித்து விட தனுஷ் திட்டமிட்டுள்ளார். அதன்பிறகு இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படமான இளையராஜா படத்தில் நடிகர் தனுஷ் நடிக்க உள்ளார். இந்த லைன் அப்புகளை எல்லாம் முடித்துவிட்டு வர எப்படியும் தனுஷூக்கு இரண்டு முதல் மூன்று மாதங்கள் தேவைப்படும் என்பதால் இளையராஜா படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு 2025ம் ஆண்டில் துவங்கும் என்று கூறப்படுகிறது.





