- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த இடத்தை நம்மால பிடிக்க முடியலையே, இப்படி ஒரு தவிப்பில் இருக்கிறாரா நடிகர் சூர்யா -...

அந்த இடத்தை நம்மால பிடிக்க முடியலையே, இப்படி ஒரு தவிப்பில் இருக்கிறாரா நடிகர் சூர்யா – மொத்த குடும்பமே செம கடுப்புல இருக்குதாமே?

- Advertisement -

நடிகர் சூர்யா, நடிகர் கார்த்தி இருவருமே உடன்பிறந்த சகோதரர்கள். தமிழ் சினிமாவில் மார்கண்டேயன் என அழைக்கப்படும் நடிகர் சிவக்குமாரின் மகன்கள். வறுமையான விவசாய குடும்ப பின்னணியை கொண்ட சிவக்குமார், தமிழ் சினிமாவில் போராடி தனக்கான இடத்தை அடைந்தவர்.

அதேபோல், துவக்கத்தில் கேமரா முன் நிற்கவும், நடக்கவும், நடிக்கவும் தெரியாத பள்ளி மாணவராக தெரிந்த சூர்யா, பின் படிப்படியாக தன் திறமையை வளர்த்துக்கொண்டு, முன்னணி ஹீரோக்களில் ஒருவராக மாறினார்.

- Advertisement -

ஆனால் சிவக்குமார், சூர்யா போல படிப்படியான வளர்ச்சி என்று இல்லாமல், முதல் படத்திலேயே பருத்திவீரன் படத்தின் நடிப்பில் தனிமுத்திரை பதித்து ரசிகர்களை கவர்ந்தார். சிவக்குமாரின் மகன், சூர்யாவின் தம்பி என்ற அடையாளங்கள் இருந்தாலும், அமீர் மிக சிறப்பாக அறிமுக நாயகன் கார்த்தியை திரையில் சிறப்பாக கொண்டு வந்ததும் உண்மை.

ஆனால் சூர்யா வந்த அதே காலகட்டத்தில்தான் நடிகர் விஜயும் தமிழ் சினிமாவுக்குள் வந்தார். முதலில் அவருக்கும் பெரியதாக படங்கள் ஓடவில்லை, பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை, கில்லி ஆகிய 3 படங்கள்தான் அவரது திரை பயணத்தை டாப் கியரில் மாற்றி, உச்சத்துக்கு கொண்டு சென்றன.

- Advertisement -

இதே விஜயும், சூர்யாவும் இயக்குநர் சித்திக் இயக்கத்தில் பிரண்ட்ஸ் படத்தில் நடித்த போதும், அதற்கு முன் நேருக்கு நேர் படத்தில் நடித்த போதும் ஸ்டேட்டஸில் ஏறக்குறைய ஒரே நிலையில்தான் இருந்தனர். ஆனால் விஜய் வேற லெவலில் பார்ம் ஆகி, ரஜினிக்கே வசூலில் முந்தும் அளவுக்கு முன்னேறி விட்டார்.

ஆனால் சூர்யா, இன்னும் தோல்வி படங்களை தருகிறார். சிறப்பான நடிப்பை தந்தாலும் ரசிகர்களின் ஆரவாரம் மிக குறைவுதான். அதேபோல் கார்த்தி, இப்போதைய 25வது படமும் பிளாப் ஆகி விட்டது. இதனால், விஜயின் அபார வளர்ச்சியை பார்த்து சூர்யா, கார்த்தி, சிவக்குமார், ஜோதிகா உள்பட குடும்பமே செம கடுப்பில் இருக்கிறதாம்.

- Advertisement -

சற்று முன்