- Advertisement -
Homeபொழுதுபோக்குசர்ச்சையை கிளப்பிய அந்த விவகாரம் - திரவுபதி 2 படத்தில்எம்கோனே பாடல் வருமா? படத்தின் இயக்குனர்...

சர்ச்சையை கிளப்பிய அந்த விவகாரம் – திரவுபதி 2 படத்தில்எம்கோனே பாடல் வருமா? படத்தின் இயக்குனர் மோகன்ஜி சொன்ன பதில்!

- Advertisement -

நடிகர் அஜீத்குமாரின் மனைவி நடிகை ஷாலினி. இவரது சகோதரர் ரிச்சர்ட் ரிஷி. இவரும் ஒரு திரைப்பட நடிகர்தான். ஆனால் பெரிய அளவில் அவர் சினிமாவில் வரவேற்பை பெறவில்லை. எனினும் அவ்வப்போது கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி படங்களில் நடித்து வருகிறார். ரிச்சர்ட் ரிஷி மற்றும் ரக்சனா இந்து சுதன் உள்ளிட்டோர் நடித்த படம் திரவுபதி 2 விரைவில் ரிலீஸாக உள்ளது.

இயக்குனர் மோகன்ஜி டைரக்ட் செய்துள்ள இந்த படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். நேதாஜி புரொடக்சன்ஸ் சோழா சக்கரவர்த்தி மற்றும் ஜிஎம் பிலிம் கார்ப்பரேஷன் இணைந்து திரவுபதி 2 படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தில் பாடகி சின்மயி எம்கோனே என்ற ஒரு பாடலை பாடி இருந்தார். இந்த பாடலை பாடியதற்காக பாடகி சின்மயிக்கு எதிராக சிலர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்தனர்.

- Advertisement -

இதையடுத்து மோகன்ஜி படத்தில் பாடியதற்காக பாடகி சின்மயி மன்னிப்பு கேட்டிருந்தார். என்னுடைய கொள்கைக்கும் இந்த படத்தின் கருத்துக்கும் நிறைய முரண்பாடுகள் இருக்கிறது. என் சித்தாந்தத்துக்கு பொருந்தாதால் வருந்துகிறேன். இந்த பாடலை யார் படம் யார் இயக்குனர் என்பது தெரியாமல் பாடிவிட்டேன் என்றும் சின்மயி தனது பதிவில் கூறியிருந்தார்.

இதற்கு இயக்குனர்கள் நடிகர்கள் தரப்பில் கடுமையான விமர்சனம் எழுந்தது. குறிப்பாக இயக்குனர் பேரரசு ஆர்வி உதயகுமார் போன்ற சிலர் பாடகி சின்மயி தெரிவித்த கருத்துக்கு கடுமையான விமர்சனங்களை தெரிவித்திருந்தனர். ஒரு படத்தில் பாடலை பாடிவிட்டு இப்படி அந்த பாடல் குறித்தும் படம் குறித்தும் எதிர்மறை விமர்சனங்களை பாடகி சின்மயி செய்வது அந்த படத்தின் வியாபாரத்தை கடுமையாக பாதிக்கும் என்று இயக்குனர் பேரரசு பேசியிருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் திரவுபதி 2 படத்தில் சின்மயி பாடிய எம்கோனே பாடல் இடம்பெறாது என்று அந்த படத்தின் இயக்குனர் மோகன்ஜி கூறியிருக்கிறார். இதுகுறித்து பேசிய இயக்குனர் மோகன்ஜி, எம்கோனே பாடல் கண்டிப்பாக படத்தில் இருக்கும். ஆனால் சின்மயி குரலில் அந்த பாடல் இருக்காது. அவருக்கு பதிலாக வேறொரு பாடகி குரலில் அந்த பாடல் படத்தில் வருகிறது.

இந்த பாடல் குறித்த சர்ச்சைக்கு பதில் அளிக்க போன வாரம் வரை சின்மயிக்கு நேரம் கொடுத்திருந்தேன். இயக்குனர் சங்கத்திலும் புகார் கொடுத்து இருக்கிறேன். அதேபோல் திரவுபதி 2 தயாரிப்பாளரும் அவரது சங்கத்தில் புகார் கொடுத்திருக்கிறார். எங்கள் படத்தை பொதுவெளியில் களங்கம் ஏற்படுத்திய அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 2 புகார்களும் பெப்சிக்கு சென்றிருக்கிறது. இது தொடர்பாக சின்மயிடம் பெப்சி தரப்பில் கேள்வி கேட்டுள்ளது என்று இயக்குனர் மோகன்ஜி கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்