- Advertisement -
Homeபொழுதுபோக்குபோச்சா... இந்த ஆண்டும் சூர்யா படம் ரிலீஸ் கிடையாதா... சோகத்தில் தலையில் துண்டைப் போட்ட ரசிகர்கள்......

போச்சா… இந்த ஆண்டும் சூர்யா படம் ரிலீஸ் கிடையாதா… சோகத்தில் தலையில் துண்டைப் போட்ட ரசிகர்கள்… தயாரிப்பு தரப்பில் இருந்து இதுதான் விளக்கம்…

- Advertisement -

சூர்யாவுக்கும் சரி அவரது ரசிகர்களுக்கும் சரி இது போதாத காலம் என்று தான் கூற வேண்டும். 2022 ஆம் ஆண்டு அவரது நடிப்பில் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வெளியானது. கடைக்குட்டி சிங்கம், நம்ம வீட்டு பிள்ளை படங்களை எடுத்த பாண்டியராஜின் அடுத்த குடும்ப பட பேக்கேஜாக இது வெளிவந்தது.

 

- Advertisement -

ஆனால் எதிர்பார்த்த வெற்றியை இந்த திரைப்படம் ருசிக்கவில்லை. இதன் பிறகு சூர்யாவிற்கும் நேரம் சரியில்லை. பாலா இயக்கத்தில் வணங்கான் திரைப்படத்தில் பாதி நாட்கள் நடிக்க, பிறகு ஏற்பட்ட மனஸ்தாபத்தால் அங்கிருந்து விலகி வந்தார். அடுத்ததாக வெற்றிமாறனுடன் வாடிவாசல் திரைப்படத்தின் நடிக்க ஸ்கெட்ச் போட்டார் சூர்யா.

 

- Advertisement -

இதற்கான பலன்களும் கிடைத்த சூழலில், கால் சீட் பிரச்சனையால் வெற்றிமாறன் விடுதலை திரைப்படத்தை இயக்கப் போக, சூர்யாவும் பதிலுக்கு சிறுத்தை சிவா உடன் இணைந்தார். இந்தக் கூட்டணி சூட்டிங் சென்றது சென்றது சென்று கொண்டே இருந்தது. ஓராண்டுக்கு மேலாக மட்டும் இதன் படபிடிப்பை நடத்தினார் சிறுத்தை சிவா. படம் பிரம்மாண்டமாக உருவாவதால், பல்லைக் கடித்துக் கொண்டு நடித்தார் சூர்யா.

 

இதில் சூர்யாவுக்கு ஜோடியாக திஷா பதானி நடித்திருக்கிறார். பாபி தியோல் வில்லனாக நடித்திருக்கும் இந்த திரைப்படம் 500 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தையும், தற்காலத்தையும் இணைக்கும் வகையில் எடுக்கப்பட்டிருக்கிறது. ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இதனை தயாரிக்க, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

 

இந்தத் திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கங்குவா படத்தின் நடித்து முடித்துவிட்டு அடுத்ததாக சுதா கொங்கரா பக்கம் சாய்ந்தார் சூர்யா. இதற்கான கதையும் ரெடியானது. புறநானூறு என டைட்டில் வைக்கப்பட்ட நிலையில் இதை சூர்யாவே தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது. துல்கர் சல்மான் நஸ்ரியா விஜய் வர்மா உள்ளிட்டோரும் நடிப்பதாக அறிவிப்பு வெளியானது.

 

ஆனால் யார் கண் பட்டதோ தெரியவில்லை, படத்தின் பணிகள் திடீரென நிறுத்தி வைக்கப்பட்டன. இதனால் விரட்டி அடைந்த சூரியா ரசிகர்கள் நம்ம தலைவருக்கு என்னதான் ஆச்சு என்று புலம்ப ஆரம்பித்தனர். எப்படியும் கங்குவா தீபாவளி பண்டிகையை ஒட்டி ரிலீஸ் ஆகும் என்று அவர்கள் கனவு கண்டு வருகின்றனர். ஆனால் தற்போது அந்த திரைப்படம் 2025 ஆம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தகவலை கேட்டு சூர்யா ரசிகர்கள் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. ஆனால் இதனை தயாரிப்பாளர் தனஞ்செயன் திட்டவட்டமாக மறுத்திருக்கிறார். என்ன இது முட்டாள்தனமான பேச்சு இதையெல்லாம் யார் பரப்புகிறார்கள் அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை என்று அவர் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்