- Advertisement -
Homeபொழுதுபோக்குபழம்பெரும் நடிகர் தேங்காய் சீனிவாசன்… தேங்காய் அடைமொழியாக பெயரில் சேர்ந்தது எப்படி? நீண்ட கால கேள்விக்கு...

பழம்பெரும் நடிகர் தேங்காய் சீனிவாசன்… தேங்காய் அடைமொழியாக பெயரில் சேர்ந்தது எப்படி? நீண்ட கால கேள்விக்கு கிடைத்த பதில் – ஆச்சரியப்பட்ட ரசிகர்கள்!

- Advertisement -

வழக்கமாக ஹீரோக்களுக்கு முக்கிய நடிகர்களுக்கு ஒரு அடைமொழி இருக்கிறது. குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமல்ஹாசன் தளபதி விஜய் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் புரட்சித் தமிழன் சத்யராஜ் என்று கூறுகிறார்கள். இதுதவிர சில நடிகர்களுக்கு பெயரிலேயே சில பெயர்கள் வந்துவிடும். இது பெரும்பாலும் அவர்கள் நடித்த படங்களின் பெயராகவும் இருக்கும்.

உதாரணமாக நிழல்கள் ரவி ஜெயம் ரவி ஆடுகளம் நரேன் வெண்ணிறஆடை மூர்த்தி ஒரு விரல் கிருஷ்ணாராவ் வெண்ணிற ஆடை நிர்மலா என பலரது பெயர்கள் இப்படி இருந்திருக்கின்றன. இதில் நடிகர் ஜெயம் ரவி தனது பெயரை சமீபத்தில் ரவிமோகன் என மாற்றிக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

அந்த வகையில் தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகர் தேங்காய் சீனிவாசன் பெயரும் ஒன்று. அவரது பெயர் எப்போதுமே தேங்காய் சீனிவாசன் என்றே அழைக்கப்பட்டு தனியாக சீனிவாசன் என்று சொன்னால் ரசிகர்களுக்கு அவரை தெரியாது. ஆனால் தேங்காய் சீனிவாசன் என்றால் உடனே அவரது முகம் சட்டென நினைவுக்கு வந்துவிடும்.

எம்ஜிஆர் சிவாஜி கணேசன் ஜெய்சங்கர் ஜெமினி கணேசன் முத்துராமன் போன்ற அன்றைய ஹீரோக்களின் பல படங்களில் நடிகர் தேங்காய் சீனிவாசன் நடித்திருக்கிறார். நடிகர் எம்ஜிஆர் மீது அளவற்ற அன்பும் மரியாதையும் கொண்டவர் தேங்காய் சீனிவாசன். அதே போல் தேங்காய் சீனிவாசன் மீதும் எம்ஜிஆருக்கு நிறைய அன்பு உண்டு. அதனால் எம்ஜிஆரின் பெரும்பாலான படங்களில் தேங்காய் சீனிவாசன் நடித்திருக்கிறார்.

- Advertisement -

அதற்கு பின் ரஜினிகாந்த் கமல்ஹாசன் போன்றவர்களுடனும் நிறைய படங்களில் தேங்காய் சீனிவாசன் நடித்திருக்கிறார். குறிப்பாக தில்லு முல்லு படத்தில் ரஜினிக்கு முதலாளியாக ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி கேரக்டரில் தேங்காய் சீனிவாசன் நடிப்பு வேற லெவலில் இருக்கும். அதே போல் காசே தான் கடவுளா படத்தில் போலி சாமியார் சுக்லானந்தா கேரக்டரில் மெட்ராஸ் பாஷை பேசி தேங்காய் சீனிவாசன் ரசிகர்களை வயிறுவலிக்க சிரிக்க வைத்திருப்பார்.

இந்நிலையில் இவரது பெயர் சீனிவாசனுடன் எப்படி தேங்காய் ஒட்டிக்கொண்டது என்பதற்கான பதில் இப்போது கிடைத்துள்ளது. அதாவது சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பு நாடக நடிகராக அவர் இருந்திருக்கிறார். கல்மனம் என்ற நாடகத்தில் தேங்காய் வியாபாரியாக நடிப்பில் சீனிவாசன் அசத்தியிருக்கிறார். அந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட நடிகர் டணால் தங்கவேலு, அவரது நடிப்பை வெகுவாக பாராட்டி தேங்காய் சீனிவாசன் என்று கூறியதே, பின்னாளில் அவரை தேங்காய் சீனிவாசன் என ரசிகர்களிடம் பிரபலப்படுத்தி விட்டது.

- Advertisement -

சற்று முன்