- Advertisement -
Homeபொழுதுபோக்குபெண்கள் பாதுகாப்பு குறித்து பரணியிடம் அன்று பேசிய கமல், பிரதீப்பிடம் இன்று பேசிய கமல் -...

பெண்கள் பாதுகாப்பு குறித்து பரணியிடம் அன்று பேசிய கமல், பிரதீப்பிடம் இன்று பேசிய கமல் – பிக்பாஸ்ல ஆண்டவருக்கு நேரம் சரியில்லையா?

- Advertisement -

விஜய் டிவியில் கடந்த ஆறு ஆண்டுகளாக, ஆறு சீசன் பிக்பாஸ் நிகழ்ச்சி நடந்து முடிந்திருக்கிறது. நடப்பாண்டில் இப்போது பிக்பாஸ் சீசன் 7 நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சி துவங்கி, 50 நாட்களை கடந்துள்ளது. வழக்கம்போல இந்த ஆண்டும் உலக நாயகன் கமல்ஹாசன்தான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

ஆனால் கடந்த ஆறு ஆண்டுகளாக பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும் போட்டியாளர்கள்தான் விமர்சனத்துக்கும், சர்ச்சைக்கும் உள்ளாவர்கள். ஆனால் இந்தமுறை பிக்பாஸ் நிகழ்ச்சி சனி, ஞாயிறு தினங்களில் தொகுத்து வழங்கும் கமல்ஹாசனும் பலத்த சர்ச்சையில் சிக்கி, விமர்சனத்துக்கு ஆளாகி வருகிறார்.

இதற்கு முக்கிய காரணம், பிக்பாஸ் வீட்டுக்குள் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற காரணத்தை சுட்டிக்காட்டி போட்டியாளர் பிரதீப் ஆண்டனியை கமல்ஹாசன் ரெட்கார்டு கொடுத்து வெளியேற்றியதுதான். இந்த செயலை, பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்த சில போட்டியாளர்களே எதிர்பார்க்கவில்லை.

இந்த விஷயத்தில் கமல் நடுநிலையாக நடந்துக்கொள்ளவில்லை. அவரை பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி விட்டனர். அவரும் இந்த தில்லுமுல்லுக்கு ஒத்துழைத்துவிட்டார் என விமர்சிக்கின்றனர். குறிப்பாக மாயா, பூர்ணிமா போன்றவர்களுக்கு கமல் அதிக முக்கியத்துவம் தருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பிக்பாஸ் முதல் சீசன் 2017ம் ஆண்டில் நடந்த போது, அதில் பங்கேற்ற போட்டியாளர் நடிகர் பரணி, இதே போன்ற ஒரு பிரச்னையை கமலிடம் தெரிவித்தார். அதாவது, பிக்பாஸ் வீட்டுக்குள் என்னால் பாதுகாப்பு இல்லை என்று கூறுகின்றனர் என்று கமலிடம் பரணி கூறுகிறார்.

அதற்கு பதிலளித்த கமல், ஏன் வீட்டுக்குள் இருக்கும் மற்ற ஆண்கள் பெண்களுக்கு பாதுகாப்பு தர மாட்டார்களா? அப்படி என்ன பரமக்குடிக்காரன் ( பரணி) 10 ஆம்பளைக்கு சமமானவனா என்றும் பரணியிடம் கிண்டலாக கேட்கிறார். ஏனெனில் கமலும் பரமக்குடிக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது. அது வேற வாய், இது நாற வாய் என, வடிவேலு டயலாக்கை கேப்சனாக வைத்து, கமல்ஹாசனை கலாய்த்து வருகி்னறனர்.

சற்று முன்