- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய்க்கு எதிராக உதயநிதியை களத்தில் இறக்கிய திமுக - 2026 சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள இப்போதே...

விஜய்க்கு எதிராக உதயநிதியை களத்தில் இறக்கிய திமுக – 2026 சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள இப்போதே தயாராகும் துணை முதல்வர் – சூடு பிடிக்குது அரசியல் ஆட்டம்!

- Advertisement -

தமிழக அரசியலில் அண்ணாதுரை தமிழகத்தை ஆட்சி செய்த காலத்தில் அவருக்கு அடுத்தபடியாக இருந்த நெடுஞ்செழியனை பின்னுக்கு தள்ளிவிட்டு, ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தவர் கருணாநிதி. அதன்பிறகு திமுக கட்சியை பல விதங்களில் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்த கருணாநிதி, விஞ்ஞான முறையில் ஊழல் செய்வதில் வல்லவர் என்று பெயர் வாங்கியவர். அவர் செய்த அரசியல் தில்லுமுல்லுகளை, கட்சியில் செய்த முறைகேடுகளை கணக்கு கேட்டதால் நடிகர் எம்ஜிஆர் திமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

அதன் பிறகு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை துவங்கிய எம்ஜிஆர், தமிழக மக்களின் பேராதரவுடன் முதல்வர் பதவியில் தொடர்ந்து மூன்று முறை நீடித்தார். தமிழக சட்டசபை தேர்தலில் 3 முறை முதல்வராக வெற்றி பெற்ற எம்.ஜி.ஆர் மக்களுக்கு சிறப்பான ஆட்சியை வழங்கினார். இன்று வரை எம்ஜிஆரின் ஆட்சி தமிழகத்தின் பொற்கால ஆட்சி என்று போற்றப்பட்டு வருகிறது.

- Advertisement -

எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு ஜெயலலிதா ஆட்சியில் அமர்ந்தார். அவர் ராணுவ கட்டுப்பாடுடன் கட்சியை நடத்தினார் என்றாலும் அவரது ஆட்சி, எம்ஜிஆர் ஆட்சியை போல மக்கள் பெரிய அளவில் வரவேற்கவில்லை. இதனால் திமுக, அதிமுக ஆட்சி மாறி மாறி நடந்தது. கருணாநிதி ஆட்சிக்காலத்தில் மு. க ஸ்டாலின் சென்னை மாநகராட்சி மேயராக இருந்து பிறகு துணை முதல்வர் ஆனார். கருணாநிதி மறைவுக்குப் பிறகு திமுக கட்சியின் தலைவராகவும், தமிழகத்தின் முதல்வராகவும் அவர் இருந்து வருகிறார்.

இந்நிலையில் இன்று தமிழக சட்டசபை அமைச்சரவையில் மாற்றம் ஏற்படுத்தி ஸ்டாலின் தனது மகன் உதயநிதியை துணை முதலமைச்சராக அறிவித்துள்ளார். அவர் ஏற்கனவே விளையாட்டு துறை அமைச்சராக இருந்தார். நடிகர் விஜய் வருகிற 2026 தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறார். தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி 2026 சட்டசபை தேர்தலில் பெருவாரியான ஓட்டுகளை வெற்றி பெற்று முதல்வர் நாற்காலியை பிடிப்பதுதான் எனது லட்சியம் என்று ஏற்கனவே அவர் கூறிவிட்டார்.

- Advertisement -

இதற்கிடையே இன்னும் ஒரே ஒரு படத்தில் மட்டும் நடித்துவிட்டு அரசியலில் முழுமூச்சாக இறங்கப் போவதாகவும் அவர் அறிவித்துள்ளார். தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின், முதுமை காரணமாக வெளியிடங்களுக்கு சென்று வரவும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவும் மிகவும் சிரமப்படுகிறார். அதே போல் கட்சியை நிர்வகிப்பதிலும் பல்வேறு சிரமங்கள் இருப்பதால் கட்சியையும் ஆட்சியையும் மகன் உதயநிதி வசம் ஒப்படைக்க முன்னோட்டமாக துணை முதல்வர் பதவியை அவருக்கு அளித்திருக்கிறார்.

அதனால் 2026 சட்டசபை தேர்தலில் நடிகர் விஜயை எதிர்கொள்ளப் போவது முழுக்க முழுக்க உதயநிதி ஸ்டாலின்தான் என்பது உறுதியாகி உள்ளது. இப்போது விஜய் போட்டியிடும் சட்டசபை தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து உதயநிதி, திமுக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசிக்க துவங்கி விட்டார். அதேபோல் விஜயும் தனது எதிர்கால அரசியல் திட்டங்கள் குறித்து வியூகங்களை அமைத்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்