இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடித்த லியோ படம், வரும் 19ம் தேதி தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரா உள்ளிட்ட உலகம் முழுவதும் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டு, அதற்கான ஏற்பாடுகள் வேகமாக நடந்து வருகின்றன. இந்நிலையில், ஆந்திராவில் லியோ ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அங்கு லியோ படத்தை வெளியிட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
ஆந்திராவிலும், விஜய்க்கு கணிசமான அளவில் ரசிகர்கள் உள்ளனர். தெலுங்கு வெர்சனில் லியோ ரிலீஸ் ஆவதால், பல கோடி ரூபாய் லாபம் கிடைக்கும். மேலும், இதற்கான தியேட்டர்கள் புக்கிங் வேகமாக நடந்துவருகிறது. ப்ரீ டிக்கெட் புக்கிங்கும் எதிர்பார்த்ததை விட அதிகமாக உள்ளது. இந்நிலையில், லியோ படம் தெலுங்கில் ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
லியோ படத்துக்கு முன் வந்த வாரிசு படத்தை தயாரித்தவர் தில்ராஜூ. இவர்தான், லியோ படத்தை தெலுங்கு மொழியில் வெளியிடாமல் தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். அதாவது வாரிசு படத்தை தில்ராஜூ தயாரித்த நிலையில், அவரிடம் இருந்து தமிழ்நாடு முழுவதும் வாரிசு படத்தை திரையிடும் உரிமையை பெற்றவர், தயாரிப்பாளர் லலித்குமார். இவரது செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தான் லியோ படத்தை தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வாரிசு படத்தை தமிழகத்தில் ரிலீஸ் செய்ய வாங்கிய வகையில் தில்ராஜூவுக்கும், லலித்குமாருக்கும் இடையில் கொடுக்கல்- வாங்கல் பிரச்னை உள்ளது. இதில் தில்ராஜூக்கு, லலித்குமார் பல கோடி ரூபாய் தரவேண்டும் என்ற தகவல் உள்ளது. அதனால், தனக்கு தர வேண்டிய பணத்தை தராமல், லியோ படத்தை ஆந்திராவில் வெளியிட அனுமதிக்க கூடாது என, தில்ராஜூ ஆந்திராவில் உள்ள தயாரிப்பாளர் சங்ககங்களிடம் புகார் அளித்ததால், லியோவுக்கு ஆந்திராவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால், லியோ படத்தை ஆந்திராவில் உள்ள சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் என்ற தயாரிப்பு நிறுவனம்தான் ரிலீஸ் செய்கிறது. இந்த நிறுவனம் மகேஷ்பாபு போன்ற பெரிய ஹீரோக்களின் படங்களை தயாரிக்கும் பெரிய நிறுவனமாகவும் உள்ளது. மேலும், இந்த நிறுவனத்துடன் தில்ராஜூ நெருங்கிய தொடர்பும் கொண்டவராக இருக்கிறார். எனினும், லலித்குமார் மீதான கோபத்தில் லியோ படத்தை ஆந்திராவில் வெளியிடக்கூடாது என புகார் தந்து தற்போதைக்கு தடை வாங்கி இருக்கிறார்.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன், தில்ராஜூ தந்தையார் மறைந்த நிலையில், அதுபற்றிய துக்கம் விசாரிக்கவும், லியோ பட விவகாரம் குறித்து பேசவும், லியோ படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார், இன்றோ அல்லது நாளையோ ஹைதராபாத்துக்கு செல்ல உள்ளார். அங்கு தில்ராஜூவை நேரில் சந்தித்து பேசி, ஆந்திராவில் லியோ ரிலீஸ் ஆவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வார் என, தகவல்கள் தெரிவிக்கின்றன.





