- Advertisement -
Homeபொழுதுபோக்குஎல்கேஜி யுகேஜி பசங்க மாதிரி சண்டை போட்டுக்கறாங்க - மத்திய மாநில அரசுகளை தவெக 2ம்...

எல்கேஜி யுகேஜி பசங்க மாதிரி சண்டை போட்டுக்கறாங்க – மத்திய மாநில அரசுகளை தவெக 2ம் ஆண்டு விழாவில் கலாய்த்த நடிகர் விஜய்!

- Advertisement -

சென்னையை அடுத்த மாமல்லபுரம் அருகே உள்ள பூஞ்சேரியில் ஒரு ரிசார்ட்டில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் 2ம் ஆண்டு துவக்க விழா இன்று நடைபெற்றது. கட்சியின் தலைவர் விஜய் பொதுச் செயலாளர் புஸ்லி ஆனந்த் மற்றும் தேர்தல் வியூகம் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் மற்றும் தவெக கட்சியில் முக்கிய நிர்வாகிகள் இந்த விழாவில் பங்கேற்றனர்.

இந்த விழாவில் நடிகர் விஜய் பேசியதாவது, தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கையை செயல்படுத்தாவிட்டால் கல்விக்கான நிதியை மாநில அரசுக்கு மத்திய அரசு கொடுக்க மாட்டாங்களாம். இதை பார்த்தால் எல்கேஜி யுகேஜி பசங்க சண்டை போட்டுக்குற மாதிரி இருக்கு. கொடுக்க வேண்டியது அவர்களின் கடமை கேட்டு வாங்க வேண்டியது இவர்களது உரிமை.

- Advertisement -

இவ்வளவு சீரியசாக ஒரு பிரச்னை ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால் பாசிசமும் பாயாசமும் அதுதான் நம்ம அரசியல் எதிரியும் கொள்கை எதிரியும் இரண்டு பேரும் என்ன செய்யறாங்கன்னா பேசி வச்சுக்கிட்டு செட்டிங்ஸ் எல்லாம் பண்ணி வச்சுக்கிட்டு மாத்தி மாத்தி சமூக வலைதளத்தில் ஹேஷ் டாக் போட்டு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

இங்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது. இவர்கள் இரண்டு பேரும் அடிச்சிக்கிற மாதிரி அடிச்சுக்குவாங்களாம். அதை நாங்க நம்பனுமாம், மக்கள் நம்பணுமாம் வாட் ப்ரோ இட் ஈஸ் வெரி ராங்க் புரோ. இதுக்கு நடுவுல நம்ம பசங்க புகுந்து சம்பவம் பண்ணிட்டு வெளிய வந்துடறாங்க. டிவிகே பார்ட் டிஎன் என்று போட்டுடறாங்க.

- Advertisement -

யார் சார் நீங்க எல்லாம், எங்க சார் இருக்கீங்க ஸ்லீப்பர் செல்ஸ் மாதிரி. இதெல்லாம் மக்களுக்கு நாம் சொல்லி புரிய வைக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்களுக்கு எல்லாம் தெரியும் ஏமாற்று வேலைன்னு. நம்ம ஊர் ரொம்ப சுயமரியாதையான ஊர். நம்ம எல்லோரையும் மதிப்போம். சுயமரியாதையை மட்டும் யாருக்காகவும் எதுக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டோம். நாம எல்லா மொழியையும் மதிப்போம். அதுல எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது.

தனிப்பட்ட முறையில் யார் வேண்டுமானாலும் எப்ப வேணாலும் எந்த ஸ்கூல்ல வேண்டுமானாலும் படிக்கலாம். அது அவங்க அவங்க தனிப்பட்ட உரிமை. ஆனால் கூட்டாட்சி தத்துவத்தை மீறி மாநில மொழிகள் கல்விக் கொள்கையை கேள்விக்குறியாக்கும் வேறு ஒரு மொழியை வலுக்கட்டாயமாக திணித்தால், அதுவும் அரசியல் ரீதியாக திணித்தால் அது சரியில்லை. அதனால் தமிழக வெற்றி கழகம் சார்பில் பொய் பிரச்சாரங்களை எல்லாம் புறம் தள்ளிவிட்டு நாம் உறுதியாக அதை எதிர்ப்போம், என்று தவெக 2ம் ஆண்டு விழாவில் கட்சியின் தலைவர் நடிகர் விஜய் பேசி இருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்