- Advertisement -
Homeபொழுதுபோக்குகமலோடு வடிவேலு சேர்ந்து நடித்த இந்த கதாப்பாத்திரத்தின் தொடர்ச்சி தான் மாமன்னன் படத்தில் வடிவேலுவின் கதாபாத்திரம்...

கமலோடு வடிவேலு சேர்ந்து நடித்த இந்த கதாப்பாத்திரத்தின் தொடர்ச்சி தான் மாமன்னன் படத்தில் வடிவேலுவின் கதாபாத்திரம் – சீக்ரெட்டை ஓபனாக உடைத்த மாரி செல்வராஜ்

- Advertisement -

“பரியேறும் பெருமாள்”, “கர்ணன்’ ஆகிய வெற்றி திரைப்படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்த இயக்குனர்தான் மாரி செல்வராஜ். இவர் இயக்குனர் ராமிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். ராம் இயக்கிய “கற்றது தமிழ்” திரைப்படத்தில் கூட ஒரு காட்சியில் நடித்திருந்தார்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த இரண்டு திரைப்படங்களும் சாதிய ஏற்றத்தாழ்வை சாடியவாறு கதையம்சம் கொண்டிருந்தது. இத்திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தாலும் ஒரு பக்கம் விமர்சனங்களும் எழுந்தது.

இதனை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “மாமன்னன்”. இத்திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று முன் தினம் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இதில் திரையுலகை சேர்ந்த பல முன்னணி கலைஞர்கள் கலந்துகொண்டனர்.

vadivelu

இதில் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது மேடையில் பேசிய இயக்குனர் மாரி செல்வராஜ்,  “நான் பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய திரைப்படங்களை உருவாக்குவதற்கு கமல்ஹாசனின் தேவர் மகன் திரைப்படம்தான் காரணம். அதே போல் மாமன்னன் திரைப்படத்தையும் தேவர் மகன் ஏற்படுத்திய தாக்கத்தினால்தான் உருவாக்கினேன்.

தேவர் மகன் படத்தில் வடிவேலு இசக்கி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார். அந்த இசக்கி கதாப்பாத்திரம் வளர்ந்து பெரியாளாக ஆனால் என்ன ஆகும் என்பதுதான் மாமன்னன் படத்தின் கதை” என்று மாரி செல்வராஜ் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

“மாமன்னன்” திரைப்படத்தின் டிரைலர் விரைவில் வெளிவரும் என கூறப்படுகிறது. அதே போல் இத்திரைப்படம் வருகிற 29 ஆம் தேதி வெளிவரும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சற்று முன்