இயக்குநர் இமயம் என அழைக்கப்படும் தமிழ் சினிமா இயக்குநர் பாரதிராஜா. தமிழ் சினிமாவின் வரலாற்று பக்கங்களில் இவரது பெயரை தவிர்த்துவிட்டு, அடுத்த பக்கங்களுக்கு சென்றுவிட முடியாது. அப்படி ஒரு ஆளுமை மிக்க கிராமத்து மண் வாசனையை, திரையரங்கு திரைகளில் கொண்டு வந்த அற்புத கலைஞன்.
இயக்குநர் பாரதிராஜாவிஜ் மகன்தான் மனோஜ். இவரது பெயரில் தான் மனோஜ் கிரியேஷன்ஸ் என்ற சொந்த தயாரிப்பு நிறுவனத்தை வைத்திருக்கிறார் பாரதிராஜா. தாஜ்மகால் படம் மூலம் தமிழ் சினிமாவில், பாரதிராஜாவே அறிமுகம் செய்தார். முதல் படத்திலேயே நல்ல அறிமுகத்தை பெற்றார். ஏ.ஆர் ரகுமானின் இசையில், திருப்பாச்சி அரிவாளை தீட்டிக்கிட்டு வாடா, வாடா’ பாடல், படம் வந்த போது பட்டிதொட்டியெங்கும் ஒலித்து டிரண்டிங் ஆனது.
ஆனால், அதற்கு பிறகு நடித்த படங்களில் மனோஜ் நடிகராக பெரிய அளவில் பேசப்படவில்லை. பெரிய அளவில் திரையரங்குகளில் ஓடவில்லை. இதனால், மனோஜ் மட்டுமின்றி, அவரது தந்தை பாரதிராஜாவும் பலத்த ஏமாற்றம் அடைந்தார். மனோஜ் நடித்த வருஷமெல்லாம் வசந்தம் படம் மட்டுமே, ரசிகர்களின் கவனத்தை பெற்ற படங்களில் ஒன்றாக இருந்தது.
பாரதிராஜாவின் மகனாக வெற்றி பெற முடியாமல் போன மனோஜ், தற்போது தந்தையின் வழியில் தானும் இயக்கநராக புதிய அவதாரம் எடுத்து இருக்கிறார். சுசி கணேசன் இயக்கத்தில் மார்கழி திங்கள் என்ற புதிய படத்தை இயக்குகிறார். இதில், அவரது தந்தையான பாரதிராஜாவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.
இந்நிலையில், சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில் மனோஜ், வெளிப்படையாக சில விஷயங்களை பேசி இருக்கிறார். அதில் தனது 18 ஆண்டு கால போராட்டம் குறித்தும், ஒரு பெரிய இயக்குநரின் மகனாக இருந்தும், தனக்கு வாய்ப்பளிக்காத தமிழ் சினிமா குறித்தும், வருத்தங்களை தெரிவித்திருக்கிறார். மோசமான விமர்சனங்களால் தனக்கு ஏற்பட்ட பாதிப்புகளை பற்றி கூறிய மனோஜ், தான் இயக்குநராக போவது குறித்து, பிரபல இயக்குநர் சொன்ன கருத்துகளையும் பகிர்ந்து இருக்கிறார்.
நான் இயக்குநர் மணிரத்னம் அவர்களை சந்தித்து, நான் டைரக்டர் ஆக போகிறேன் என்று கூறினேன். பயமாக இருக்கிறது சார் என்றும் அவரிடம் தெரிவித்தேன். அதற்கு மணிரத்னம், எதற்கு பயப்படறே, உன்னோட முதல் படம், உன்னோட புத்தி, உன்னோட மனசு, உனக்கு என்னவெல்லாம் தோணுதோ அதையெல்லாம் எடு. யாரை பத்தியும் கவலைப்படாதே. முதல் படத்துல தான் நீ விரும்பியதை எடுக்க முடியும், என்று எனக்கு அட்வைஸ் கொடுத்தார் என்று கூறி இருக்கிறார் மனோஜ்.





