- Advertisement -
Homeபொழுதுபோக்குகர்நாடகாவில் தக்லைஃப் படத்தை வெளியிட தடை - கர்நாடக திரைப்பட வர்த்தக சபை பகிரங்க அறிவிப்பு!

கர்நாடகாவில் தக்லைஃப் படத்தை வெளியிட தடை – கர்நாடக திரைப்பட வர்த்தக சபை பகிரங்க அறிவிப்பு!

- Advertisement -

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வருகிற ஜூன் 5ம் தேதி தக்லைஃப் படம் ரிலீஸாகிறது. மணிரத்னம் இயக்கிய இந்த படத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு திரிஷா அபிராமி நாசர் அசோக் செல்வன் மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கின்றனர். இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார்.

கடந்த சில தினங்களுக்கு முன் சென்னையில் தக்லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக கன்னட நடிகர் சிவராஜ்குமார் கலந்துக்கொண்டு பேசினார். அதன்பிறகு பேசிய நடிகர் கமல்ஹாசன், தமிழில் இருந்து பிறந்ததுதான் கன்னட மொழி என்று பேசினார்.
இது பெரிய அளவில் வைரலானது.

- Advertisement -

கன்னட மொழியை குறைத்து பேசியதாக கூறி இதற்கு கன்னட அமைப்புகள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா பாஜக தலைவர் எடியூரப்பா உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், கன்னட வளர்ச்சித்துறை அமைச்சர் சிவராஜ் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

கர்நாடகாவில் உள்ள கன்னட அமைப்புகள் தக்லைஃப் அங்கு வைக்கப்பட்டு இருந்த பட போஸ்டர்களை கிழித்து பேனர்களை சேதப்படுத்தின. கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லை என்றால் தக்லைஃப் படத்தை கர்நாடகாவில் திரையிட விடமாட்டோம் என்று எச்சரித்திருந்தனர்.

- Advertisement -

ஆனால் கமல், தவறாக பேசியிருந்தால் மன்னிப்பு கேட்பேன். அன்பு ஒரு போதும் மன்னிப்பு கேட்காது. நான் தவறாக எதுவும் பேசவில்லை. மன்னிப்பு எல்லாம் கேட்க முடியாது என்று திட்டவட்டமாக கூறிவிட்டார். மேலும் தக்லைஃப் படம் கர்நாடகாவில் ரிலீஸ் ஆகாவிட்டால், அந்த படத்தின் தயாரிப்பாளர் என்ற முறையில் கமலுக்கு ரூ. 20 கோடி வரை இழப்பு ஏற்பட்டாலும் பரவாயில்லை என்று படக்குழுவினரிடம் கூறிவிட்டார். தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கமும், நேற்று வெளியிட்ட அறிக்கையில் கமலுக்கு ஆதரவு தெரிவித்திருந்தது.

அரசியல் கட்சி தலைவர்கள் சீமான் அன்புமணி திருமாவளவன் போன்றவர்களும் கமலின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதற்கிடையே கர்நாடகா திரைப்பட வர்த்தக சபை பிரதிநிதி கோவிந்து, கர்நாடகா மக்களின் மனதை காயப்படுத்தியதற்கு கமல்ஹாசன் மன்னிப்பு கேட்கவில்லை. அதனால் கர்நாடகா ரக்சனா வேதிகே என்ன சொல்கிறதோ அதைக் கேட்டுதான் நாங்கள் செயல்பட வேண்டும். எனவே கமல்ஹாசன் நடித்த தக்லைஃப் படத்தை கர்நாடகாவில் திரையிட தடை விதிக்கப்படுகிறது என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்