- Advertisement -
Homeபொழுதுபோக்குஏதே... நாளை ரிலீசாகும் தக் லைப் திரைப்படம் திரையரங்குகளில் இத்தனை மணி நேரம் ஓடுகிறதா... தரமான...

ஏதே… நாளை ரிலீசாகும் தக் லைப் திரைப்படம் திரையரங்குகளில் இத்தனை மணி நேரம் ஓடுகிறதா… தரமான சம்பவம் செய்வாரா மணிரத்னம்…

- Advertisement -

ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து இருந்த தக் லைப் திரைப்படம், நாளை ரிலீஸ் செய்யப்படுகிறது. கமல்ஹாசன், சிலம்பரசன், திரிஷா, அசோக் செல்வன், அபிராமி, நாசர், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்டோர் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறார்கள். வழக்கம்போல ஏ ஆர் ரகுமான் இதற்கு இசையமைத்துள்ளார்.

படத்தில் ரங்கராய சக்திவேல் நாயக்கர் என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் கமல்ஹாசன். அவர் கேங்ஸ்டர் ஆக வருவது உறுதியாகி இருக்கிறது. கமல்ஹாசனின் வளர்ப்பு மகனாக சிலம்பரசன் நடித்திருக்கிறார். அண்மையில் இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.

அதில் கேங்ஸ்டர் ஆக இருக்கும் கமல்ஹாசன் தலைமறைவு வாழ்க்கை வாழ்வது போன்றும், அவரது இடத்தை சிலம்பரசன் கைப்பற்ற துடிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்று இருந்தன. அதிலும் சிலம்பரசன் பேசிய இனிமேல் நான் தான் இங்க ரங்கராய சக்திவேல் வசனம் பலரது கவனத்தையும் ஈர்த்தது. இதுபோக டிரைலரின் கடைசி காட்சியில் இருவரும் சண்டை போடுவது போன்ற சம்பவமும் இடம் பெற்று இருந்தது.

இதேபோல் கமலுடன் தோழராக வரும் நாசரும் அவரது இடத்தை அடையத் துடிப்பது போன்று காட்சிகள் இடம்பெற்று இருந்தன. இப்படி முன்னோட்டமே மிகப்பெரிய அளவில் பேசப்பட்டதால், தக் லைப் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது கமல்ஹாசன் எழுதிய அமர்ஹை படத்தின் கதை தான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது பற்றி மணிரத்னிடம் கமல்ஹாசன் கூற, உடனடியாக ஓகே சொன்ன இயக்குனர் தனக்கு ஏற்றது போல திரைக்கதையை மாற்றி அமைத்திருக்கிறார். படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தமிழிலிருந்து பிறந்தது தான் கன்னடம் என்று கமல்ஹாசன் பேசியது கர்நாடகாவில் சர்ச்சையானது. கமல்ஹாசன் நிச்சயமாக மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லை என்றால் படத்தை வெளியிட மாட்டோம் என்று கன்னட திரைப்பட வர்த்தக சபை தெரிவித்தது.

நீதிமன்றமும் கமலை கடுமையாக சாட, அவர் மன்னிப்பு கேட்கப் போவதில்லை என தெளிவாக கூறிவிட்டார். கர்நாடகாவில் படத்தின் வெளியீட்டை ஒத்தி வைக்கப் போவதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இதன் காரணமாக தற்போது தக் லைஃப் திரைப்படம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் படத்தின் முதல் பாதி, ஒரு மணி நேரம் 24 நிமிடங்கள் இருக்கும் என்றும், இரண்டாம் பாதி ஒரு மணி நேரம் 20 நிமிடங்கள் உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக இந்த திரைப்படம் இரண்டு மணி நேரம் 45 நிமிடம் ஓடுகிறது.

சற்று முன்