- Advertisement -
Homeபொழுதுபோக்கு7 மாதங்களுக்கு முன்பே தக்லைப் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு, இதற்கு பின்னால் இப்படி ஒரு...

7 மாதங்களுக்கு முன்பே தக்லைப் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு, இதற்கு பின்னால் இப்படி ஒரு காரணம் இருக்கிறதா? – உலக நாயகன்னா சும்மாவா?

- Advertisement -

நடிகர் கமல்ஹாசனின் நடிப்பில் உருவான படம் தக்லைப். மணிரத்னம் இயக்கத்தில் உருவான இந்த படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல், ரெட் ஜெயின்ட் மூவிஸ், மெட்ராஸ் டாக்கீஸ் என 3 பெரிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது. 38 ஆண்டுகள் கழித்து, நாயகன் படத்துக்கு பின் மணிரத்னம்- கமல் இந்த படத்தில் மீண்டும் இணைந்துள்ளனர்.

நடிகர் கமல்ஹாசனுடன் இந்த படத்தில் சிம்பு மிக முக்கியமான கேரக்டரில் நடித்திருக்கிறார். மேலும் திரிஷா, அபிராமி உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் படத்தில் நடித்துள்ளனர். ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்தியன் 2 தோல்விக்கு பிறகு கமல் நடித்துள்ள இந்த படத்துக்கு எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.

- Advertisement -

நவம்பர் 7ம் தேதியான நேற்று நடிகர் கமல்ஹாசனின் 70வது பிறந்த நாள். அதனால் பிறந்த நாள் பரிசாக நேற்று தக்லைப் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டது. மேலும், அதில் படத்தின் ரிலீஸ் தேதி வருகிற 2025ம் ஆண்டு ஜூன் மாதம் 5ம் தேதி என்றும் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

தக்லைப் படப்பிடிப்பு முடிந்து, போஸ்ட் புரடக்சன்ஸ் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இந்த சூழ்நிலையில் வரும் டிசம்பரில் அல்லது ஜனவரி மாதம் பொங்கலில், ஏப்ரல் தமிழ் புத்தாண்டில் படத்தின் ரிலீஸ் தேதியை திட்டமிடாமல், 7 மாதங்கள் கழித்து ஜூன் மாதம் 5ம் தேதிக்கு தள்ளி வைத்து விட்டார்களே என கமல், சிம்பு ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

- Advertisement -

ஆனால் அதற்கான காரணம் இப்போதுதான் தெரிய வந்துள்ளது. இப்போது ரஜினி நடிக்கும் கூலி, விக்ரம் நடிக்கும் வீர தீர சூரன், அஜீத்குமாரின் விடாமுயற்சி, குட் பேட் அக்லி, சூர்யாவின் 44வது படம், தனுஷ் நடித்து இயக்கும் இட்லிக்கடை, சிவகார்த்திகேயன் நடித்துவரும் ஏஆர் முருகதாஸ் படம் என பல படங்கள் அடுத்த ஆண்டில் வெளிவர இருக்கின்றன.

இந்த சூழ்நிலையில் எந்த படம், எப்போது ரிலீஸ் ஆகும் என திட்டவட்டமாக இப்போதைக்கு தெரியாது. அதனால், தக்லைப் படம் ஜூன் 5ம் தேதி ரிலீஸாகிறது. அதற்கேற்ப உங்களது படங்களின் ரிலீஸ் தேதியை திட்டமிட்டுக் கொள்ளுங்கள் என கமல்ஹாசன், மணிரத்னம் ஆலோசித்து ரிலீஸ் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இதனால் போதிய தியேட்டர்கள் கிடைக்கவில்லை போன்ற சில சிக்கல்களால் மற்ற படங்களின் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பாதிக்காத வகையில் 7 மாதங்கள் இடைவெளியில் தக்லைப் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர்.

- Advertisement -

சற்று முன்