- Advertisement -
Homeபொழுதுபோக்குதக்லைஃப் படம் குறித்து வெளியான முக்கியமான தகவல், அப்பாடா தப்பிச்சோம் என சந்தோஷப்பட்ட ரசிகர்கள்!

தக்லைஃப் படம் குறித்து வெளியான முக்கியமான தகவல், அப்பாடா தப்பிச்சோம் என சந்தோஷப்பட்ட ரசிகர்கள்!

- Advertisement -

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவான படம் தக்லைஃப் படம் வருகிற ஜூன் 5ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. நாயகன் படத்துக்கு பின் 37 ஆண்டுகள் கழித்து மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்திருக்கிறார். நாயகன் படத்தில் வேலு நாயக்கராக நடித்த கமலுக்கு தேசிய விருது கிடைத்தது. அதே போல் தக்லைஃப் படத்துக்கும் கமலுக்கு தேசிய விருது கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த படத்தில் முதன்முறையாக கமலுடன் இணைந்து சிம்புவும் நடித்திருக்கிறார். கேங்ஸ்டராக உள்ள நடிகர் கமலிடம் சிறுவனாக அடைக்கலமாகிறார் சிம்பு. அவரை தனது மகனாக வளர்த்து ஆளாக்குகிறார் கமல்ஹாசன் என்பது போன்ற கதைக்களத்தை தான் தக்லைஃப் படத்தின் டிரெய்லர் காட்டியிருக்கிறது.

- Advertisement -

இந்த படத்தில் அபிராமி திரிஷா என 2 நாயகிகள் இருந்தாலும் இதில் யாருமே நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக தெரியவில்லை. இருவருமே நடிகர் கமலுடன் கொஞ்சி குலாவுவது போன்ற டிரெய்லர் காட்சிகள் காட்டப்பட்டுள்ளன. இதுவரை சிம்புவுக்குதான் திரிஷா ஜோடி என நினைத்த ரசிகர்களின் எண்ணத்தில் பலத்த ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.

தக்லைஃப் படத்தை பொருத்த வரை நடிகர் சிம்புவுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளதை படத்தின் தயாரிப்பாளரான கமல்ஹாசனே ஒரு முறை சொல்லியிருக்கிறார். இந்த படம் ஆரம்பிக்கிற போது என் படமாகவும் முடிகிற போது உன் படமாகவும் மாறிவிட்டது என்று நடிகர் சிம்புவிடம் நடிகர் கமல் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

வழக்கமாக இதுவும் ஒரு கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவான ஆக்சன் படம்தான் என்றாலும் மணிரத்னம் கமல் சிம்பு திரிஷா கூட்டணியில் ஏஆர் ரகுமான் இசையில் உருவான படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. நிச்சயமாக இந்த படம் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் பேசப்படும் ஒரு வெற்றிப் படமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

தக்லைஃப் படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் தக்லைஃப் படம் திரையில் ஓடும் நேரம் 2 மணி நேரம் 45 நிமிடங்கள் எனத் தெரிய வந்துள்ளது. வழக்கமாக சில படங்கள் 3 மணி நேரம், 3 மணி நேரம் 15 நிமிடம் என படம் பார்க்க வரும் ரசிகர்களை பாடாய்படுத்தும் நிலையில், தக்லைஃப் படம் 2 மணி நேரம் 45 நிமிடம் என்பது ரசிகர்களுக்கு சற்று நிம்மதியை தந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்