- Advertisement -
Homeபொழுதுபோக்குவாஷிங் மெஷின்ல துணியை போடற மாதிரி தூக்கி போட்டுடணும் - பெரிய நடிகர் குறித்து யோகிபாபு...

வாஷிங் மெஷின்ல துணியை போடற மாதிரி தூக்கி போட்டுடணும் – பெரிய நடிகர் குறித்து யோகிபாபு சொன்ன சீக்ரெட்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்தவர் யோகிபாபு. விஜய் டிவியில் லொள்ளு சபா நிகழ்ச்சியில் நடித்துக்கொண்டு இருந்த அவர் யோகி படத்தில் நடித்தார். அதன்பிறகு தான் லொள்ளுசபா பாபு என அழைக்கப்பட்ட அவர் யோகிபாபு என்று அழைக்கப்பட்டார்.

சில படங்களில் சில காட்சிகளில் வந்து சென்ற யோகிபாபுவுக்கு காக்கா முட்டை படம் நல்ல அடையாளத்தை கொடுத்தது. தொடர்ந்து ரெமோ கோலமாவு கோகிலா ஜெயிலர் பீஸ்ட் போன்ற படங்கள் பெரிய வரவேற்பை பெற்றுத் தந்தன. குறிப்பாக மண்டேலா படத்தில் அவரது நடிப்பு அதிக கவனம் பெற்றது.

- Advertisement -

சமீபகாலமாக சூரி சந்தானம் சதீஷ் என பல காமெடி நடிகர்கள் ஹீரோவாக நடித்து வரும் நிலையில் தமிழ் சினிமாவில் காமெடி நடிகர் பஞ்சம் நிலவுகிறது. அதனால் பெரும்பாலான படங்களில் காமெடி ரோலில் நடிக்க யோகிபாபு மட்டுமே இருக்கிறார். அதனால் பல படங்களில் அவர் பிஸியாக நடித்து வருகிறார்.

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய காமெடி நடிகர் யோகி பாபு கூறியதாவது, ஒரு பெரிய நடிகர். அவர் பெயரைச் சொல்ல விரும்பலே. ஒரு படம் சூட்டிங் முடிச்சிட்டு வரும்போது அவர் என்னிடம் பேசினார். நான் உன் கூட நடிச்சிருக்கணும். என்ன காரணம்ன்னு தெரியல. வேணாம்ன்னு சொல்லிட்டாங்க. இப்ப சும்மா தான் இருக்கேன் என்று சொன்னார்.

- Advertisement -

பெரிய பெரிய ஹிட் கொடுத்தவர் அந்த நடிகர். யாருக்கும் அந்த நிலைமை வரக்கூடாது. என்னோட ஆசை எல்லாருக்கும் வேலை செய்யணும். எல்லாருக்கும் வாய்ப்பு கிடைக்கணும். அப்போதுதான் வாழ்க்கை நல்லா இருக்கும்.

என்னையும் ஆரம்பத்தில் அந்த மாதிரி யோசிச்சு இருக்காங்க. அசிங்கப்படுத்தி இருக்காங்க. அதை எல்லாம் மண்டையில் ஏற்றிக்கொண்டு இருக்கக் கூடாது. வாஷிங் மெஷின்ல துணியை போடுற மாதிரி தூக்கி போடணும். அதை சுமந்துகிட்டு இருந்தால் நமக்கு தான் பிரச்சனை. நிம்மதியாக இருக்க முடியாது. ஒழுங்காக வேலை செய்யவும் முடியாது என்று நடிகர் யோகி பாபு அப்போது கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்