- Advertisement -
Homeபொழுதுபோக்குஒரு ரூபா கூட செலவில்லாம, தியேட்டர்காரர்களுக்கு கோடிக்கணக்குல இப்படி ஒரு ஷேர் வருதா? -...

ஒரு ரூபா கூட செலவில்லாம, தியேட்டர்காரர்களுக்கு கோடிக்கணக்குல இப்படி ஒரு ஷேர் வருதா? – இத்தனை நாளா இது நமக்கு தெரியலையே…

- Advertisement -

தமிழ் சினிமாவில் புதிய படங்கள் ரிலீஸ் என்றால், தியேட்டர்களில் மக்கள் கூட்டம் அலைமோதும். ரசிகர்கள் கூட்ட நெரிசலில், மணிக்கணக்கில் நின்று முண்டியடித்து, தியேட்டர் டிக்கெட் கவுண்டர்களுக்குள் அடித்து பிடித்து நுழைந்து, டிக்கெட் வாங்குவதே ஒரு பெரிய போராட்டமாக அந்த காலத்தில் இருந்தது.

அதிலும் எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல் போன்றவர்கள் நடித்த படங்களுக்கு, கூட்ட நெரிசலில் சிக்கி, பலரும் உயிர்பிழைத்ததே பெரிய விஷயமாக மோசமான சம்பவங்களும் நடந்தது உண்டு. ஏனென்றால், அப்போதெல்லாம் தியேட்டர்களில் அப்படித்தான் ரசிகர்களுக்கு டிக்கெட் தரப்பட்டது.

- Advertisement -

அதன்பிறகுதான் தியேட்டர்களில் முன்பதிவு, டிக்கெட் ரிசர்வேஷன் முறை கொண்டு வரப்பட்டது. சில காட்சிகளுக்கு முன்னதாகவே, தியேட்டருக்கு சென்று டிக்கெட் கவுண்டரில் பணம் செலுத்தி, ரிசர்வேஷன் டிக்கெட் வாங்கிக்கொள்ளும் நிலை வந்ததால், இந்த நெரிசல் தொல்லை தீர்ந்தது. இப்போதெல்லாம், மல்ட்டி பிளக்ஸ் தியேட்டர்களில் நீண்ட வரிசை டிக்கெட் கவுன்டர்களே கட்டப்படுவது இல்லை.

ஆண்ட்ராய்டு யுகமாக மாறிவிட்ட இந்த காலகட்டத்தில் டிக்கெட் புக்கிங் ஆப்கள் மூலம், விரும்பிய தியேட்டர்களில், விரும்பிய நாளில், விரும்பிய காட்சியை, விரும்பிய சீட்டில் அமர்ந்து பார்க்கும் வசதியும் வந்துவிட்டது. வீட்டில் இருந்தபடியே, அந்த ஆப் மூலமாக ஆன்லைனில் டிக்கெட் ரிசர்வ் செய்து, நேராக அந்த நேரத்தில் தியேட்டருக்கு சென்று, செல்போனில் உள்ள விவரத்தை காட்டி, ரிசர்வ் செய்த சீட்டில் படம் பார்க்கலாம்.

- Advertisement -

ஆனால், இந்த மொபைல் ஆப் வசதி மூலம், அந்த செயலியை செயல்படுத்தும் நிறுவனங்கள் பல கோடி ரூபாய்களை லாபமாக அள்ளி வருகிறது. இதையே தியேட்டர் நிர்வாகங்களோ, தமிழக அரசோ செயல்படுத்தினால் பெரும் லாபம் பார்க்க முடியும். குறிப்பாக, தமிழக அரசு வரி ஏய்ப்புகளை தடுக்க முடியும். தியேட்டர்களும் கணிசமான லாபம் பார்க்க முடியும்.

ஆனால், எந்த மொபைல் ஆப் மூலமாக, ரசிகர்கள் வந்தால் என்ன, அந்த ஆப் வாயிலாக, தியேட்டர்களுக்கும் குறிப்பிட்ட அளவில் பெரிய ஷேர் வருவதால், தியேட்டர் ஓனர்கள் இதை கண்டுகொள்வது இல்லை. அதுமட்டுமின்றி, முன்பணமாகவே, தமிழகத்தில் பெரிய நகரங்களில் உள்ள சில முக்கியமான தியேட்டர்களுக்கு, பல கோடி ரூபாய்களை அள்ளி தந்துள்ளது இந்த மொபைல் ஆப் நிறுவனங்கள். அதனால், இதுபற்றி கண்டுகொள்ளாமல், ஒரு ரூபாய் செலவில்லாமல், கோடி கோடியாக ஷேர் வருவதால் அமைதி காக்கின்றனர் தியேட்டர் உரிமையாளர்கள்.

- Advertisement -

சற்று முன்