- Advertisement -
Homeபொழுதுபோக்குபழசை எல்லாம் கொஞ்சம் நெனைச்சி பாருங்க… பிரபல நடிகர்கள் மீது திருப்பூர் சுப்ரமணியன் பாய்ச்சல்…

பழசை எல்லாம் கொஞ்சம் நெனைச்சி பாருங்க… பிரபல நடிகர்கள் மீது திருப்பூர் சுப்ரமணியன் பாய்ச்சல்…

- Advertisement -

தமிழ் சினிமாவில் சமீபகாலமாக நடிகர்களின் அதிகபட்ச சம்பளம் என்பது பெரிய பிரச்னையாக தயாரிப்பாளர்களுக்கு மாறி விட்டது. இதனால் பல தயாரிப்பாளர்கள் சினிமா தயாரிப்பதையே விட்டு விலகும் சூழல் உருவாகி விட்டது. சின்ன பட்ஜெட் படங்கள் தயாரிப்பு என்பதே காணாமல் போய்விட்டது. இதுகுறித்து திருப்பூர் சுப்ரமணியன் ஆவேசமாக பேசியிருக்கிறார்.

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய தமிழ்நாடு திரையரங்கு மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியன் கூறியதாவது, முன்னணி நடிகர்கள் நடித்த படங்களை பார்க்க தான் பெரும்பாலான மக்கள் தியேட்டர்களுக்கு வருகின்றனர். புதுமுக நடிகர்கள் படங்கள் என்றால் மக்கள் தியேட்டர் பக்கமே எட்டி பார்க்க மாட்டேன் என்று இருக்கிறார்கள்.

- Advertisement -

முன்னணி நடிகர் 10 பேர் நடிக்கிற படங்களை பார்க்க மட்டுமே தியேட்டர்களுக்கு வருகின்றனர். புதுமுக நடிகர் ஒருவர் நடித்து 2 படம் ஹிட் ஆகிவிட்டால் 50 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கிய அவர்கள் அப்புறம் 5 கோடி ரூபாய் சம்பளம் கேட்கின்றனர். உதாரணமாக புது ஹீரோவாக கவின் அறிமுகமானார். அவரது 2 படம் நன்றாக ஓடியவுடன் என்னுடைய சம்பளம் 5 கோடி என உயர்த்தி விட்டார்.

அப்புறம் அவர் நடிச்ச 2 படம் சுமாராக தான் போச்சு என்றாலும் கம்முன்னு இருந்து விடுவார்கள். அவர்கள் எல்லாம் மாறணும். இதை பத்தி சிவகார்த்திகேயனே சொல்லி இருக்கிறார். நான் 5000 ரூபாய்க்கு காம்பியரிங் பண்ணிட்டு இருந்தேன் என்று. இப்போது அவர் ஒரு படத்துக்கு 50 கோடி ரூபாய் வாங்குகிறார். அதை நான் தப்பு சொல்லவில்லை.

- Advertisement -

அவரது திறமை உழைப்பு அவர் படங்கள் நன்றாக வியாபாரம் ஆவதால் அவர் சம்பளம் உயர்கிறது. ஆனால் சர்வர் சுந்தரம் படத்தில் நாகேஷ் சொன்னது மாதிரிதான். பழைய கோட்டை இவங்க எல்லாம் ஞாபகம் வெச்சுக்கணும். நான் உட்பட யாராக இருந்தாலும் முதலில் நாம் எப்படி இருந்தோம் என்பதை ஞாபகம் வெச்சுக்கணும்.

சினிமாவில் அப்போது வியாபாரம் நன்றாக இருந்தது. நான் நிறைய சம்பளம் வாங்கினோம். தயாரிப்பாளர்களும் கொடுத்தார்கள். இப்போது வியாபாரம் நன்றாக இல்லை. அதனால் நாம் சம்பளத்தை குறைத்துக்கொள்ள வேண்டும் என்ற மனநிலைக்கு பிரபல நடிகர்கள் எல்லாம் வர வேண்டும் என்று திருப்பூர் சுப்ரமணியன் பேசியிருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்