- Advertisement -
Homeபொழுதுபோக்குஇந்தியன் 3 படத்தை கை கழுவிய லைகா புரடக்சன்ஸ் - படம் வெளிவருமா, வராதா… நீடிக்கும்...

இந்தியன் 3 படத்தை கை கழுவிய லைகா புரடக்சன்ஸ் – படம் வெளிவருமா, வராதா… நீடிக்கும் சிக்கலுக்கு பதில் சொல்லும் லேட்டஸ்ட் தகவல் இதுதான்!

- Advertisement -

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் அனிருத் இசையில் கடந்தாண்டில் வெளியான படம் இந்தியன் 2. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த படம், மாபெரும் தோல்வியை சந்தித்தது. கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் இப்படி ஒரு சொதப்பலான படமா என்று ரசிகர்கள் அதிர்ந்து போய்விட்டனர்.

கடந்தாண்டில் வெளியான படங்களில் இந்தியன் 2 கங்குவா படங்களில் எது மிக மோசமான படம் என்று பட்டிமன்றமே நடத்தும் அளவுக்கு 2 படங்களும் ரசிகர்களை பாடாய்படுத்தி விட்டன. அதிலும் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்த கங்குவா படத்துக்கு கத்துவா என டைட்டில் வைத்திருக்கலாம் என்றும் கடுமையாக விமர்சித்தனர்.

- Advertisement -

இந்நிலையில் இந்தியன் 3 படத்தை ரி ஷூட் செய்யவும் முக்கிய பாடல் காட்சி ஒன்றை எடுக்கவும் தனது சம்பளம் குறித்தும் பேசிய இயக்குனர் ஷங்கர், ரூ. 80 கோடி வரை லைகா நிறுவனத்திடம் கேட்டிருக்கிறார். அதற்கு மறுப்பு தெரிவித்த லைகா நிறுவனம், சில நிபந்தனைகளை இயக்குனர் ஷங்கருக்கு விதித்தது.

இந்தியன் 2 படம் பலத்த நஷ்டம் தந்து விட்டதால் இந்தியன் 3 படத்துக்கு நீங்கள் சம்பளத்தை விட்டுக் கொடுங்கள், தவிர எடுத்த வரை இந்தியன் 3 படத்தை போட்டுக் காட்டினால் படப்பிடிப்புக்காக தொகையை தருகிறோம் என்றும் கூறியிருக்கின்றனர். தனது சம்பளத்தை விட்டுத் தரவோ, எடுத்த வரை படத்தை லைகா நிறுவனத்துக்கு போட்டு காட்டவோ முடியாது என ஷங்கர் மறுத்து விட்டார்.

- Advertisement -

இந்நிலையில் தற்போது இந்தியன் 3 படத்தில் இருந்து தயாரிப்பு நிறுவனம் லைகா புரடக்சன்ஸ் விலகி விட்டது. தற்போது ரெட் ஜெயின்ட் மூவிஸ் நிறுவனம் சார்ந்த செண்பக மூர்த்தி, இந்தியன் 3 படத்தை ரிலீஸ் செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். கமல் மற்றும் இயக்குனர் ஷங்கரிடம் இந்தியன் 3 படம் குறித்து தொடர்ந்து பேசி ஆலோசித்து வருகிறார்.

அதாவது இந்தியன் 3 படத்தில் பாடல் காட்சி இனி புதிதாக எடுக்க வேண்டாம். இதுவரை எடுத்த காட்சிகளில் ஏதேனும் மாற்றம் திருத்தம் இருந்தால் 10 நாட்களில் பேட்ச் ஒர்க் பணி செய்து அந்த காட்சிகளை ரி ஷூட் செய்து படத்தை ரிலீஸ் செய்ய செண்பகமூர்த்தி பேசியிருக்கிறார். மேலும் கமல் ஷங்கர் சம்பளத்தை குறைத்துக்கொள்ளவும் அல்லது படம் ரிலீஸான பிறகு பிராப்பிட் ஷேர் முறையில் குறிப்பிட்ட தொகை பெறவும் பேச்சுவார்த்தை தீவிரமாக நடத்தப்பட்டு வருவதாக லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்