- Advertisement -
Homeபொழுதுபோக்குஇன்று பிறந்த நாள் கொண்டாடும் நடிகர் விஜய் சேதுபதி… வாழ்த்துகள் தெரிவித்து டிரெயின் பட வீடியோ...

இன்று பிறந்த நாள் கொண்டாடும் நடிகர் விஜய் சேதுபதி… வாழ்த்துகள் தெரிவித்து டிரெயின் பட வீடியோ வெளியிட்ட படக்குழு – செம மாஸா இருக்கே பாஸ்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விஜய் சேதுபதி வலம் வருகிறார். அவரது 50வது படம் மகாராஜா கடந்தாண்டில் வெளியாகி மாஸ் ஹிட் ஆனது. குரங்கு பொம்மை பட இயக்குனர் நிதிலன் சுவாமிநாதன் இயக்கிய இந்த படத்தில் மம்தா மோகன்தாஸ் அபிராமி சாச்சனா அனுராக் காஷ்யப் நட்டி சிங்கம்புலி நட்டி முனீஷ்காந்த் அருள்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

கடந்தாண்டில் வெளியான மகாராஜா படம், 100 நாட்களை கடந்து ஓடியது. 100 கோடி ரூபாய் வசூல் தமிழ் படங்களின் வரிசையிலும் இணைந்தது. சீனாவின் வெளியான இந்த படம் 90 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது. மேலும் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி அங்கும் 2 கோடி பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது.

- Advertisement -

இப்போது பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை விஜய் சேதுபதி நடத்தி வருகிறார். வரும் ஞாயிறுடன் இது முடிவடைகிறது. இந்த வாரத்தில் பிக்பாஸ் டைட்டில் வின்னர் அறிவிக்கப்பட உள்ளார். சௌந்தர்யா அல்லது முத்துக்குமரன் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. பணப்பெட்டி டாஸ்க்கில் ஜாக்குலின் வெளியேறி விட்டதாக தெரிய வந்துள்ளது.

பாண்டிராஜ் இயக்கத்தில் பரோட்டா மாஸ்டராக நடித்துவரும் விஜய் சேதுபதி அடுத்து நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் பட இயக்குனர் பாலாஜி தரணிதரன் இயக்கும் ஒரு படத்திலும் சுந்தரபாண்டியன் இயக்கும் எஸ்ஆர் பிரபாகரன் இயக்கும் மற்றொரு படத்திலும் நடிக்க கமிட் ஆகி உள்ளார்.

- Advertisement -

விஜய் சேதுபதி நடித்து முடித்துள்ள முக்கியமான படம் டிரெயின் என்று கூறப்படுகிறது. இந்த படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தயாரித்திருக்கிறார். இந்த படத்தை மிஷ்கின் டைரக்ட் செய்திருக்கிறார். கோவையில் இருந்து சென்னை வரும் ரயிலில் நடக்கும் சம்பவங்களே படத்தின் முழுநீள கதையாக உள்ளது. இந்த படத்தில் பல ஆண்டுகளுக்கு பின் நாசர் வில்லனாக நடித்துள்ளார்.

இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி ஜனவரி 16ம் தேதியான இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி மிஷ்கின் இயக்கத்தில் உருவான ட்ரெயின் படத்தில் இருந்து சில காட்சிகளுடன் படக்குழு விஜய் சேதுபதிக்கு வாழ்த்துகளை தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் விஜய் சேதுபதி நடித்த மாஸான சில காட்சிகளும் வெளியாகி உள்ளன. அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

வீடியோ :https://www.youtube.com/watch?v=yjTRPnD_oH4&t=26s

- Advertisement -

சற்று முன்