- Advertisement -
Homeபொழுதுபோக்குநல்ல கதைகளை விரும்பும் தமிழ் சினிமா ரசிகர்கள், 10 நாட்களில் டூரிஸ்ட் பேமிலி படத்துக்கு கிடைத்த...

நல்ல கதைகளை விரும்பும் தமிழ் சினிமா ரசிகர்கள், 10 நாட்களில் டூரிஸ்ட் பேமிலி படத்துக்கு கிடைத்த பலத்த வரவேற்பு – வசூல் இத்தனை கோடிகளா?

- Advertisement -

எப்போதுமே மலையாள சினிமாவுக்கு ரசிகர்கள் மத்தியில் தனி வரவேற்பு கிடைத்து வருகிறது. அதற்கு அடிப்படை காரணம் அன்று முதல் இன்று வரை அவர்கள் கதையை நம்பி மட்டுமே படம் எடுக்கின்றனர். படத்தின் கதைக்குதான் ஹீரோ தேவைப்படுகிறாரே தவிர, ஹீரோவுக்கான கதை அங்கு உருவாக்கப்படுவது இல்லை என்பதே யதார்த்தமான உண்மை.

ஆனால் தமிழ் சினிமாவின் நிலமை வேறு மாதிரி பல ஆண்டுகளாகவே இருந்து வருகிறது. புரட்சித் தலைவர் எம்ஜிஆர் காலம் துவங்கி ரஜினி கமல் காலக்கட்டத்தை கடந்து இப்போது விஜய் அஜீத்குமார் காலம் வரை ஹீரோக்களுக்காக படம் பண்ணுவதே தமிழ் சினிமாவின் சூத்திரமாக இருந்து வருகிறது.

- Advertisement -

அதாவது கதாநாயகன்தான் படத்தின் மையம். கதாநாயகனை சுற்றியே நடக்கும் கதைக்களத்தில் ஹீரோயிசம் காட்டி எப்படி ஹீரோ வில்லன்களை பழிவாங்கி ஜெயிக்கிறார் என்பதே கதை. இப்படியே கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமா ஒரு மோசமான அதலபாதாளத்துக்கு சென்றுவிட்டது. ஹீரோக்களும் பல ஆயிரம் கோடி ரூபாய் சொத்துகளுக்கும் அதிபதியாகி விட்டனர்.

இதில் பாரதிராஜா கே பாக்யராஜ் வி சேகர் சேரன் பாலா என ஒரு சில இயக்குனர்கள் மட்டுமே கமர்ஷியல் என்ற வலைக்குள் சிக்காமல் நல்ல படங்களை ரசிகர்களுக்கு தந்த சிறந்த படைப்பாளிகளாக கவனம் பெற்றிருக்கின்றனர். தமிழ் சினிமாவை கொஞ்சம் காப்பாற்றியும் இருக்கின்றனர்.

- Advertisement -

இந்த வரிசையில் காக்கா முட்டை சித்தா பண்ணையாரும் பத்மினியும் குட்நைட் பார்க்கிங் லப்பர் பந்து குடும்பஸ்தன் போன்ற நல்ல படங்களின் வரிசையில் இப்போது சசிக்குமார் சிம்ரன் நடிப்பில் வெளியாகி உள்ள டூரிஸ்ட் பேமிலி படமும் இணைந்திருக்கிறது. யதார்த்தமான கதையம்சம் கொண்ட இந்த படத்துக்கு தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரிய ஆதரவும் வரவேற்பும் கிடைத்துள்ளது.

அயோத்தி படத்துக்கு பிறகு நடிகர் சசிக்குமாருக்கு இந்த படம் சிறந்த கம்பேக் தந்துள்ளது. நடிகை சிம்ரனும் இந்த படத்துக்கு பிறகு பல படங்களில் நடிக்க வாய்ப்பு உருவாகி உள்ளது. கடந்த 1ம் தேதி மே தினம் தொழிலாளர் தினத்தன்று வெளியான டூரிஸ்ட் பேமிலி படம் 10 நாட்களில் 36 கோடி ரூபாய் வசூலை கடந்திருக்கிறது. நல்ல கதை கொண்ட படங்களை எப்போதும் ரசிகர்கள் கைவிட்டது இல்லை என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணம் ஆகியிருக்கிறது.

- Advertisement -

சற்று முன்