- Advertisement -
Homeபொழுதுபோக்குரசிகர்கள் குடும்பங்களுடன் கொண்டாடி வரும் டூரிஸ்ட் பேமிலி படம் - 5 நாட்களில் இத்தனை கோடிகள்...

ரசிகர்கள் குடும்பங்களுடன் கொண்டாடி வரும் டூரிஸ்ட் பேமிலி படம் – 5 நாட்களில் இத்தனை கோடிகள் வசூலித்து விட்டதா? – போட்றா வெடிய!

- Advertisement -

சுப்ரமணியபுரம் என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக நடிகராக அறிமுகமானவர் சசிக்குமார். முதல் படமே அவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. இந்த படத்தில் இடம்பெற்ற கண்கள் இரண்டால்… பாடல் பட்டி தொட்டி எங்கும் ஒலித்தது. ஜெய் ஸ்வாதி சமுத்திரக்கனி கஞ்சா கருப்பு என பலரும் இந்த படத்தில் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர்.

இந்த படத்தை தொடர்ந்து சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிக்குமார் நடித்த படம் நாடோடிகள். இதில் வசந்த் விஜய் பரணி கஞ்சா கருப்பு அனன்யா அபிநயா ராஜா லட்சுமி ராமகிருஷ்ணன் ஜெயப்பிரகாஷ் என பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இந்த படமும் அபாரமான வெற்றியை பெற்றது. இந்த 2 படங்களும் சசிக்குமாரை முன்னணி நடிகராக மாற்றியது.

தொடர்ந்து சுந்தரபாண்டியன் குட்டிப்புலி போராளி ஈசன் கொம்பு வெச்சி சிங்கம் பேட்ட என பல படங்களில் நடித்த நடிகர் சசிக்குமாருக்கு அயோத்தி படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத் தந்தது. அதன்பிறகு இப்போது ரிலீஸாகி உள்ள டூரிஸ்ட் பேமிலி படம் நடிகர் சசிக்குமாருக்கு கம்பேக் படமாக அமைந்துவிட்டது.

நடிகர் சசிக்குமார் படங்கள் என்றாலே அவரது யதார்த்தமான நடிப்பும் பேச்சும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விடும். அந்த வகையில் அவருக்கு ஒரு நல்ல அழுத்தமான கதையில் உருவான இந்த படம் மிகப்பெரிய வெற்றியை தந்திருக்கிறது. குறிப்பாக இந்த படத்தில் சிம்ரன் ஜோடியாக நடித்தது அவருக்கு கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது.

டூரிஸ்ட் பேமிலி படத்தை மில்லியன் டாலர்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் டைரக்ட் செய்திருக்கிறார். இவர் 24 வயது இளைஞர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் கதை திரைக்கதையில் நல்ல மெச்சூரிட்டியான ஒரு படைப்பாளியாக தன்னை நிரூபித்திருக்கிறார். இந்த படத்துக்கு இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் அருமையான இசை தந்துள்ளார்.

இந்த படத்தில் நடிகர் சசிக்குமார் சிம்ரன் ஆகியோருடன் யோகிபாபு ரமேஷ் திலக் எம்எஸ் பாஸ்கர் பகவதி பெருமாள் கமலேஷ் மிதுன் ஜெய் சங்கர் என பலரும் தங்களது கேரக்டர்களை உணர்ந்து சிறப்பான நடிப்பை தந்துள்ளனர். கடந்த 1ம் தேதி வெளியான இந்த படம் 5 நாட்களில் உலகம் முழுவதும் ரூ. 20 கோடி வசூலை அள்ளியுள்ளது. தொடர்ந்து ஹவுஸ்புல் காட்சிகளாக இந்த படம் பெரும்பாலான திரையரங்குகளில் ஓடி வருகிறது.

சற்று முன்