- Advertisement -
Homeபொழுதுபோக்குஇந்திய அளவில் திரும்பிப் பார்க்க வைத்த டூரிஸ்ட் ஃபேமிலி... வேறு எந்த திரைப்படமும் நெருங்க முடியாத...

இந்திய அளவில் திரும்பிப் பார்க்க வைத்த டூரிஸ்ட் ஃபேமிலி… வேறு எந்த திரைப்படமும் நெருங்க முடியாத சாதனையைப் படைத்து அசத்தல்…

- Advertisement -

தமிழ் சினிமாவில் நடப்பாண்டு ஏராளமான திரைப்படங்கள் வெளியாகி இருந்தாலும் அதில், வெற்றி பெற்ற திரைப்படங்கள் என்னவோ மிக மிக குறைவுதான். அதிலும் குறிப்பாக குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட திரைப்படங்கள்தான் விமர்சன ரீதியாக, ரசிகர்களை கவர்ந்திருக்கின்றன. இந்தப் பட்டியலில், முதலாவதாக நான் பார்க்கப்போவது மணிகண்டன் நடிப்பில் வெளிவந்த குடும்பஸ்தன் திரைப்படம்.

கடந்த ஜனவரி மாதம் வெளியான இந்த திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றது. முக்கியமாக மிகக் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், கோடிக்கணக்கில் வசூல் செய்து லாபத்தை பார்த்தது. இதேபோல் பிப்ரவரி மாதம் வெளியான, டிராகன் திரைப்படமும் வசூல்மேல் வசூல் குவித்தது.

- Advertisement -

விமர்சன ரீதியாக மிகப்பெரிய வரவேற்பு பெற்ற இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக சென்றனர். அடுத்ததாக இந்த பட்டியலில் மிக முக்கியமான இடத்தை பிடித்திருக்கிறது டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம். கடந்த மே மாதம் ஒன்றாம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. அபிசன் ஜீவித் என்னும் இளம் இயக்குனர்தான் இந்த திரைப்படத்தை இயக்கியிருந்தார்.

சசிகுமார் சிம்ரன் யோகி பாபு எம் எஸ் பாஸ்கர் ரமேஷ் திலக் உட்பட ஏராளமானோர் இந்த திரைப்படத்தில் நடித்திருந்தனர். மிகவும் பாசிட்டிவான கதைக்களத்தில் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருந்தது. இலங்கையில் இருந்து தமிழ்நாட்டிற்கு தஞ்சம் புகும் குடும்பத்தினர் எதிர்கொள்ளும் பிரச்சனையை இயக்குனர் கூறி இருந்தார். அதை அவர் திரைக்கதையின் மூலம் அழகாக விவரித்த விதம்தான் ரசிகர்களை கவர்ந்திருந்தது.

- Advertisement -

வெறும் ஏழு கோடி ரூபாயில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், 90 கோடி ரூபாய் வசூல் செய்து திரையரங்கு விநியோகஸ்தர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியிருக்கிறது. அது மட்டுமல்ல நடப்பாண்டு இந்திய சினிமாவில் வெளியான திரைப்படங்களிலேயே, அதிக லாபம் கொடுத்த திரைப்படமாக டூரிஸ்ட் பேமிலி மாறி இருக்கிறது. கிட்டத்தட்ட இந்த திரைப்படம் 1200 சதவீதம் லாபத்தை கொடுத்திருக்கிறது.

இந்தப் பட்டியலில் டிராகன் திரைப்படமும் உள்ளது. வெறும் 40 கோடி ரூபாயில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் 120 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது. அதாவது ஒட்டுமொத்தமாக இந்த திரைப்படம் 300 சதவீதம் லாபத்தை கொடுத்திருக்கிறது. மகாராஷ்டிராவில் வெளியான சாவா திரைப்படமும் பலருக்கும் லாபத்தை கொடுத்த திரைப்படமாக பேசப்பட்டு வருகிறது. இந்த திரைப்படத்திற்கு 90 கோடி ரூபாய் செலவு செய்திருக்கிறார்கள். அதேசமயம் 800 கோடி ரூபாய் வரை இந்த திரைப்படம் வசூல் பார்த்து இருக்கிறது.

- Advertisement -

சற்று முன்