இயக்குனர் பாசில் இயக்கத்தில் நடிகர்கள் சத்யராஜ் ரகுவரன் நடிகைகள் சுகாசினி ரேகா உள்ளிட்டோர் நடித்த படம் என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு. இந்த படத்தில் ரகுவரன் – ரேகா தம்பதி குழந்தையை, தங்களது பிள்ளையை பறிகொடுத்த சத்யராஜ் – சுகாசினி தம்பதி தத்து எடுத்து வந்து ஆசையாக வளர்ப்பார்கள்.
ஆனால் ஒரு கட்டத்தில் தனது மகள் எங்களுக்கு திருப்பித் தர வேண்டும் என்று சத்யராஜிடம் ரகுவரன் வந்து நிற்பார். பிள்ளை பாசத்தை மையப்படுத்திய இந்த படம் அந்த காலகட்டத்தில் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. உணர்வுபூர்வமான இந்த படத்தை இப்போதும் ரசிக்க முடியும். இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக பொம்முக்குட்டியாக நடித்தவர் தான் கீது மோகன்தாஸ்.
அவர் வளர்ந்த பிறகு மலையாளத்தில் பல படங்களில் நாயகியாக நடித்திருக்கிறார். நளதமயந்தி என்ற படத்தில் நடிகர் மாதவனுக்கு ஜோடியாகவும் நடித்திருந்தார். இப்போது அவர் இயக்குனராக உருவாக்கிய படம் தான் டாக்ஸிக். இந்த படத்தில் யஷ் கதாநாயகனாகவும் நயன்தாரா கியாரா அத்வானி ருக்மணி வசந்த் ஹூமா குரேஷ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
நடிகர் யஷ் நடித்த கேஜிஎஃப் மற்றும் கேஜிஎஃப் 2 படங்களை போல டாக்ஸிக் பெரிய பிளாக்பஸ்டர் படமாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் கதையே இல்லாத மொக்கை படம், ஹை பட்ஜெட்டில் உருவான பிட்டு படம் என்றெல்லாம் இந்த படத்தை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
ஏ சான்றிதழ் பெறப்பட்ட இந்த படத்தில் முதல் காட்சி முதல் இறுதி காட்சி வரை வன்முறை காட்சிகளும் ஆபாச காட்சிகளும் நிறைந்திருக்கின்றன. படம் முழுவதும் இரத்தம் தெறிக்கும் வன்முறை காட்சிகள் மிரட்டுகின்றன. படம் முழுவதும் பெண்களை கொச்சைப்படுத்தும் விதமான ஆபாச காட்சிகள் அதிகம் உள்ளதாகவும் விமர்சனம் எழுந்துள்ளது.
மொத்தம் 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் முதல் நாளில் மட்டும் உலகளவில் ரூ. 150 கோடியை வசூலித்து இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வளவு மோசமான எதிர்மறை விமர்சனங்களையும் கடந்து இந்த படம் முதல் நாளில் ரூ. 150 கோடியை கடந்தாலும் இனி வரும் நாட்களில் வசூல் அப்படியே சரிந்துவிடும். இது மாபெரும் மொக்கை படம். படம் பார்க்க சென்றவர்கள் விட்டால் போதும் வெளியே ஓடிவிடும் என்ற மனநிலையில் படத்தை பார்த்து வெளியே வந்து, யாரும் இந்த படம் பார்க்க போகாதீங்க என்று அறிவுறுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.





