- Advertisement -
Homeபொழுதுபோக்குஎம்ஜிஆரின் அந்த பாட்டுக்காக வாட்ச் மோதிரம் செயினை எல்லாம் கழட்டிக் கொடுத்த பிரபல இசையமைப்பாளர்...

எம்ஜிஆரின் அந்த பாட்டுக்காக வாட்ச் மோதிரம் செயினை எல்லாம் கழட்டிக் கொடுத்த பிரபல இசையமைப்பாளர் – கவிஞர் வாலி செய்த தரமான சம்பவம்!

- Advertisement -

பல ஆண்டுகளுக்கு முன்பு நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் வாலி கூறியதாவது, எம்ஜிஆர் நடிக்கும் கலங்கரை விளக்கம் என்ற ஒரு படம் எடுக்கிறார்கள். அதற்கு நான் பாட்டு எழுத போயிருந்தேன். ஏவிஎம் ஸ்டுடியோவில் தான் கம்போஸிங் நடந்தது. அந்த படத்தின் இயக்குனர் ஷங்கரும் அங்கிருந்தார்.

அங்கே படப்பிடிப்பு நடந்துக்கொண்டு இருந்தது. எம்ஜிஆர் பக்கத்தில் இருக்கிறார். ஒரு கதாநாயகன் கதாநாயகியை நினைத்து பாடுகிறான். அதாவது எம்ஜிஆர் சரோஜா தேவியை நினைச்சிக்கிட்டு பாடறார். அதுதான் சிச்சுவேசன். அப்போது எம்எஸ் விஸ்வநாதன் ஒரு காரியம் செய்கிறார்.

- Advertisement -

அவரோட கழுத்துல இருந்த தங்க செயின், அவர் கையில் கட்டி இருந்த ரோலக்ஸ் வாட்ச் பிரஸ்லெட் மோதிரங்கள் எல்லாத்தையும் கழட்டி அவரோட ஹார்மோனியம் பெட்டி மேல வைக்கிறார், அதுல ரோலக்ஸ் வாட்ச்சோட செயினே ஆறேழு சவரனுக்கு மேல இருக்கும்.

கழுத்துல இருக்கிற செயின் நாலஞ்சு பவுன் இருக்கும். மோதிரம் எல்லாம் சேர்த்து 15 சவரனுக்கு மேல இருக்கும். அதை எல்லாம் ஹார்மோனியம் பெட்டி மேல வெச்சுட்டு, நீங்க ஒரு அருமையான பல்லவி சொன்னா, இது எல்லாத்தையும் நீங்களே எடுத்துக்கலாம் என்று என்னிடம் சொல்லிட்டார்.

- Advertisement -

டைரக்டர் சங்கர் பக்கத்துல உட்கார்ந்து இருக்கிறார். அப்போ நான் யோசனை பண்ணி எழுதிய பாடல்தான் நான் காற்று வாங்க போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன் அதை கேட்டு வாங்கி போனாள் அந்த கன்னி என்னவானாள் என்ற பாடல். இதை கேட்டு விஸ்வநாதன் ரொம்பவும் இம்ப்ரஸ் ஆயிட்டார்.

அப்போ இந்த நகையை எல்லாம் நீங்க எடுத்துக்குங்க என்று சொல்லி என் பக்கமாக அதை எல்லாம் தள்ளி வைத்தார். திருப்பி அதை எல்லாம் அவர்கிட்டயே கொடுத்துட்டு உங்க வாழ்த்துகள் இருந்தால் அதுவே போதும் என்று சொல்லி விட்டேன் என்று அந்த நேர்காணலில் கவிஞர் வாலி கூறியிருக்கிறார். எம்ஜிஆரின் இந்த பாடல் இப்போதும் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு பாடலாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்