தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளாக நடித்து வரும் நடிகை திரிஷா, இப்போதும் கதாநாயகியாக நடிக்கிறார் என்பதுதான் ஆச்சரியமான ஒரு விஷயம். ஏனெனில் அவரது காலகட்டத்தில் நடிக்க பலர் இப்போது டிவி சீரியல்களில் அக்கா, அண்ணி, அம்மா வேடங்களில் நடித்துக்கொண்டு இருக்கின்றனர். இன்னும் சிலர் சினிமாவில் இருந்து விலகி, வளர்ந்த பிள்ளைகளுக்கு அம்மாவாக உள்ளனர்.
ஆனால் இன்னும் திரிஷா அந்த பழைய இளமை மாறாமல், பார்த்தவுடன் பத்திக்கொள்ளும் அதே அழகுடன், ரசிகர்களை வசீகரப்படுத்தும் சிரிப்புடன் காணப்படுகிறார். பொன்னியின் செல்வன் படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், ஐஸ்வர்யா ராயை விட, பெரிய அழகி என்று சொன்னது திரிஷாவை தான். முதல் பாகத்திலும், 2ம் பாகத்திலும் ரசிகர்களை திருப்திபடுத்திய குந்தவை மட்டும்தான்.
அந்த படத்துக்கு பிறகு விஜய்க்கு ஜோடியாக லியோ படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் விஜயை தவிர வேறு யாருக்குமே படத்தில் நடிக்க அதிக வாய்ப்பு இல்லை. இருந்தாலும் சில காட்சிகளில் வந்தாலும் திரிஷா நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது. ஆனால், தேவையில்லாத அந்த காட்சியில் உதட்டு முத்தம் கொடுத்த திரிஷாவின் நடிப்பு ரசிகர்களுக்கு அதிருப்தியை தான் தந்தது.
இப்போது விடாமுயற்சி படத்தில் அஜீத்குமாருக்கும், அடுத்து மலையாளத்தில் இரண்டு படங்களிலும், தெலுங்கில் ஒரு படத்திலும், தமிழில் கமல்ஹாசன் நடிக்கும் மணிரத்னம் இயக்கும் தக்லைப் படத்திலும் திரிஷா நடிக்க கமிட் ஆகி இருக்கிறார். இப்படி திரிஷா மீண்டும் ஒரு ரவுண்டு வர ஆரம்பித்துள்ள நிலையில் அடுத்தடுத்த படங்களில் நடிக்க அவருக்கு அழைப்பு வந்தபடி உள்ளது.
இப்போது தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி விஷ்வம்பரா என்ற படத்தில் நடிக்க திரிஷா கமிட் ஆகியுள்ளார். நடிகர் சிரஞ்சீவியுடன் 18 ஆண்டுகளுக்கு பிறகு இந்த படத்தில், சிரஞ்சீவிக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், திரிஷாவை வரவேற்று, சிரஞ்சீவி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதற்கு நன்றி தெரிவித்துள்ள நடிகை திரிஷா, 18 ஆண்டுகளுக்கு பிறகு ஒன் அண்ட் ஒன்லி மெகா ஸ்டாருடன் மீண்டும் இணைவது பெருமை. உங்கள் அன்பான வரவேற்புக்கு நன்றி திரு சிரு சார், என்று சிரஞ்சீவிக்கு பதிலளித்துள்ளார். சமீபத்தில்தான் விஜய் உடன் 15 ஆண்டுகளுக்கு பின்பும், அஜீத் உடன் 10 ஆண்டுகளுக்கு பின்பும் திரிஷா நடித்திக்கிறார். சிரஞ்சீவியுடன் 18 ஆண்டுகளுக்கு பின் நடிக்க இருக்கிறார்.





