- Advertisement -
Homeபொழுதுபோக்குஒரு நாளாவது நான் அப்படி இருக்கணும், நடிகை திரிஷாவுக்கு இப்படி ஒரு விபரீத ஆசையா? -...

ஒரு நாளாவது நான் அப்படி இருக்கணும், நடிகை திரிஷாவுக்கு இப்படி ஒரு விபரீத ஆசையா? – என்னம்மா நீங்க இப்படி பண்றீங்களேம்மா…

- Advertisement -

நடிகை திரிஷா, தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக இருந்து வருகிறார். இப்போது நயன்தாராவின் போட்டி நடிகையாக திரிஷா தான் இருக்கிறார். ஏனெனில் இருவருமே தமிழ் சினிமாவில் கதாநாயகியாக வந்து 20 ஆண்டுகளுக்கு மேலாகிறது. இதுவரை இருவருமே நாயகிகளாக வலம் வருகின்றனர்.

திரிஷாவை பொருத்த வரை துவக்கத்தில் பெரிய அளவில் அவர் ஜொலிக்கவில்லை என்றாலும், ஹரி இயக்கத்தில் விக்ரம் நடித்த சாமி படத்தில், திரிஷாவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து கில்லி, திரிஷாவுக்கு நல்ல வெற்றியை பெற்றுத் தந்தது. தொடர்ந்து திருப்பாச்சி, உனக்கும் எனக்கும், மன்மதன் அம்பு போன்ற படங்களால் திரிஷா முன்னணி நாயகியாக மாறினார்.

இடையில் மார்க்கெட் சரிந்து காணப்பட்ட திரிஷாவுக்கு கம்பேக் படமாக 96 அமைந்தது. அதன்பிறகு பொன்னியின் செல்வன் குந்தவை கேரக்டர் அவரது இமேஜை முன்பிருந்ததை விட பலமடங்கு உயர்த்தி விட்டது. இப்போது மலையாளம், தெலுங்கு, தமிழ் என 3 மொழிகளிலும் பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் திரிஷா.

இதற்கிடையே மன்சூர் அலிகான் பிரச்னை, கூவத்தூர் பிரச்னை என பல விவகாரங்கள் எழுந்தாலும் எதையும் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் நடிப்பில் முழு கவனம் செலுத்தி வரும் திரிஷா, 40 வயதுகளை கடந்தும் இன்னும் முரட்டு சிங்கிளாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை திரிஷா நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற போது, தனது நீண்டகால ஆசை குறித்து வெளிப்படையாக பேசியிருக்கிறார். அப்போது, எனக்கு எப்போதுமே ஒரு சின்ன ஆசை இருக்கிறது. அது என்னவென்றால் ஒரு நாளாவது நான் ஆணாக இருக்க வேண்டும், ஆணாக வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

ஒரு பையனாக இருப்பது எப்படி, அவர்களது உடல் அமைப்பு, அவர்களது மனநிலை பற்றி தெரிந்துக்கொள்ள ஆசைப்படுகிறேன். இதுகுறித்து என் அம்மாவிடம் அடிக்கடி சொல்லிக் கொண்டே இருப்பேன் என்று திரிஷா கூறியிருக்கிறார். இது நீண்ட நாட்களுக்கு முன் அவர் சொன்ன தகவல் என்றாலும், இப்போது அது வைரலாகி வருகிறது.

சற்று முன்