நடிகர் விஜய், இப்போதைய நிலையில் ஒரு படத்தில் நடிக்க ரூ. 200 கோடி வாங்கும் அளவுக்கு தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கிறார். இன்னும் சூப்பர் ஸ்டார் கூட அந்த சம்பளத்தை நெருங்கவில்லை. தனது 172 வது படத்தில் நடிக்க விஜயை விட ரூ. 10 கோடி அதிகமாக ரூ. 210 கோடி கேட்டிருக்கிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் விஜய் ஏற்கனவே அவரது அப்பா எஸ்ஏ சந்திரசேகருடன் சில ஆண்டுகளாக பேசாமல் இருக்கிறார். விஜய் மனைவி சங்கீதா, இப்போது அவரது பெற்றோர் வீட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. அதனால் பல மாதங்களாக விஜய், சென்னை நீலாங்கரை வீட்டில் தனியாக இருப்பதாகவும் தெரிகிறது.
இதற்கிடையே மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் புதிய படத்தில் துவக்கவிழா, கடந்த டிசம்பர் மாதத்தில் நடந்தது. லைகா புரடக்சன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் துவக்க விழாவிலும் விஜய் பங்கேற்கவில்லை. இதற்கு காரணம், விஜய் தனது மகனுக்கும் கருத்து வேறுபாடு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இப்படி விஜய் குடும்பத்தில் நிறைய பிரச்னைகள் இருக்க முக்கிய காரணம், நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது அவரது மனைவிக்கும், மகன் ஜேசன் சஞ்சய்க்கும் பிடிக்கவில்லை. பல ஆண்டுகளாக நடித்து சம்பாதித்த பணத்தை எல்லாம் அரசியலில் செலவு செய்து வீணாக்கி விடாதீர்கள் என சங்கீதா, ஜேசன் சஞ்சய் இருவருமே விஜயிடம் கூறியுள்ளனர்.
ஆனால் விஜய், அவர்களது கருத்தை கண்டுகொள்ளவில்லை. இதுகுறித்து பலமுறை அவரிடம் பேசியும் மனைவி, மகன் பேச்சுக்கு ரெஸ்பான்ஸ் செய்யாமல், அரசியலில் இறங்குவதற்கான ஆயத்தப் பணிகளில் தீவிரம் காட்டி வந்துள்ளார். இதன் காரணமாகவே, கோபமான சங்கீதா அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்று பல மாதங்களாக அங்கேயே இருக்கிறார்.
இதற்கிடையே நடிகை திரிஷாவுடன் விஜய் நட்பு கொண்டிருப்பது சங்கீதாவுக்கு பிடிக்கவில்லை. திரிஷாவுடன் நடிக்க வேண்டாம் என பலமுறை தெரிவித்தும், லியோ படத்தில் விஜய் திரிஷாவுடன் நடித்தார். அதுவும் உதட்டு முத்தக்காட்சியும் அதில் இடம்பெற்றது. அதுமட்டுமின்றி, திரிஷாவுக்கு ஒரு கோடி ரூபாய் மதிப்பில் விஜய், வைர நெக்லஸ் வாங்கி கொடுத்த விவகாரமும் சங்கீதாவுக்கு தெரிய வந்துள்ளது. இதன்பின்புதான், சங்கீதா விஜயை விட்டு பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது.





