- Advertisement -
Homeபொழுதுபோக்குவெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த சூப்பர் ஹிட் படத்தில் அந்த மாஸ் கேரக்டரில் நடிக்க வேண்டியவர் பார்த்திபனா?...

வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த சூப்பர் ஹிட் படத்தில் அந்த மாஸ் கேரக்டரில் நடிக்க வேண்டியவர் பார்த்திபனா? – அடடா…சூப்பர் சான்ஸை விட்டுட்டாரே?

- Advertisement -

நடிகர் பார்த்திபன் தமிழ் சினிமாவில் நல்ல இயக்குனராக, நல்ல நடிகராக தன்னை வெளிப்படுத்திக்கொண்டவர். இயக்குனர் கே பாக்யராஜிடம் உதவி இயக்குனராக ஆரம்பத்தில் பணிசெய்தவர். பிறகு 1990ம் ஆண்டில் புதிய பாதை படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக, ஹீரோவாக அறிமுகமானவர். இப்போதும் நல்ல படைப்பாளியாக, தமிழ் சினிமாவில் இருந்து வருகிறார்.

நேற்று முன்தினம் இந்தியன் 2 வெளியான அதே நாளில் பார்த்திபன் இயக்கிய நடித்துள்ள டீன்ஸ் படமும் வெளியானது குறிப்பிடத்தக்கது. ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்த படம் வௌியாகும் அதே நாளில், அவர் தனது படத்தையும் ரிலீஸ் செய்வதற்கு காரணம், ஒரு கலைஞனாக தன் படம் மீது தனக்குள்ள நம்பிக்கைதான் என்றும் நேர்காணல் ஒன்றில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

புதிய பாதை படத்தில் நடித்த போது, தனக்கு ஜோடியாக நடித்த நடிகை சீதாவை காதலித்து பார்த்திபன் திருமணம் செய்துக்கொண்டார். ஆனால் 11 ஆண்டுகள் அவர்களது குடும்ப வாழ்க்கை நீடித்த நிலையில் 2 மகள்கள், ஒரு மகன் இருக்கிறார். ஆனால் மகன் வளர்ப்பு மகன் என்று கூறப்படுகிறது. பார்த்திபன், சீதா பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் பார்த்திபன், முக்கிய தகவலை ஒன்றை கூறியிருக்கிறார். அதாவது இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த படம் ஆடுகளம். தனுஷ் நாயகனாகவும், டாப்ஸி நாயகியாகவும் நடித்திருந்தனர். சேவல் சண்டையை மையப்படுத்தி இந்த படம் எடுக்கப்பட்டு இருந்தது.

- Advertisement -

இந்த படத்தில் தனுஷின் சேவல் சண்டை குருவாக பேட்டக்காரன் என்ற கேரக்டரில் இலங்கையை சேர்ந்த நடிகர் ஜெயபாலனும், அவருடன் சேவல் சண்டையில் மோதும் வில்லன் கேரக்டரில் இன்ஸ்பெக்டராக நரேனும் நடித்திருந்தனர். அதனால், அவரது பெயரே ஆடுகளம் நரேன் என்றே அழைக்கப்படுகின்றனர். கிஷோர் இந்த படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார். அவருக்கு நடிகர் சமுத்திரக்கனி பின்னணி குரல் கொடுத்திருந்தார்.

ஆடுகளம் படம், 6 தேசிய விருதுகளை பெற்ற படம் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி இந்த படத்தில் பேட்டக்காாரன் கேரக்டரில் நடித்த ஜெயபால் நடிப்பு, படத்தில் அதி முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. ஆனால் பேட்டக்காரன் கேரக்டரில் முதலில் நடிக்க நடிகர் பார்த்திபனை தான் அழைத்துள்ளனர். ஆனால் அவர் மறுத்துவிட்டதால் அதில் ஜெயபாலன் நடித்திருக்கிறார். இந்த தகவலை சமீபத்தில் ஒரு நேர்காணலில் நடிகர் பார்த்திபனே கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்