மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டாராக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் மோகன்லால். அவரது படங்கள் சமீபகாலமாக பெரிய அளவில் வெற்றிப் படங்களாக அமைந்து அபாரமான வசூலை தந்து வருகின்றன. தமிழில் இருவர் சிறைச்சாலை உன்னைப்போல் ஒருவன் ஜில்லா ஜெயிலர் போன்ற படங்களில் மோகன்லால் நடித்திருக்கிறார். தமிழ் ரசிகர்களுக்கும் மிக பிடித்தமான நடிகர்
கேரளாவில் திரைப்பட இயக்குனர்களில் மிக முக்கியமானவர் ஜீத்து ஜோசப். இவர் பல வெற்றிப் படங்களை ரசிகர்களுக்கு தந்துள்ளார். இந்நிலையில் பேஷன் ஸ்டியோஸ் சுதன் தயாரிப்பாளர் ரமேஷ் பிள்ளை இருவரும் இணைந்து தயாரித்த படம் ராம் 2. இந்த படத்தின் மோகன்லால் ஹீரோவாக நடித்துள்ளார். திரிஷா நாயகியாக நடித்திருக்கிறார். இந்த படம் இப்போது ரிலீஸ்க்கு தயாராக உள்ளது.
இந்நிலையில் ராம் படத்தின் முதல் பாகத்தை ரூ. 100 கோடி பட்ஜெட்டில் தயாரிக்க இயக்குனர் ஜீத்து ஜோசப் கூறிய நிலையில் தயாரிப்பாளர்கள் அதிர்ந்து போய்விட்டனர். அதன்பிறகு கதையை கேட்ட அவர்கள் அந்த படத்தை தயாரிக்கவும் முன்வந்து விட்டனர். ஏனெனில் ராம் 2 படத்தின் முந்தைய பாகமான ராம் படம் வந்தால்தான் ராம் 2 படம் மிகப்பெரிய வரவேற்பை வெற்றியை பெறும் என்பது தெரிய வந்துள்ளது.
இதையடுத்து ராம் படத்தின் முதல் பாகம் உருவான நிலையில் படப்பிடிப்பும் நடந்துள்ளது. இன்னும் படத்தின் நாயகி திரிஷா நடிகர் மோகன்லாலுடன் நடிக்க வேண்டிய காட்சிகள் மட்டுமே பாக்கி இருக்கின்றன. இந்நிலையில் ராம் படத்தை வருகிற ஜூன் 26ம் தேதி ரிலீஸ் செய்ய படத்தின் தயாரிப்பாளர்கள் முடிவு செய்திருக்கின்றனர்.
ஆனால் நடிகர் மோகன்லாலும் நடிகை திரிஷாவும் இணைந்து நடிக்க வேண்டிய காட்சிகளை எடுத்து முடித்தால் ராம் படம் திரைக்கு வர முடியும். இந்த படத்தை முடித்துவிட்டு தான் மோகன்லால் அவர் கமிட் ஆகியுள்ள அடுத்த படத்தில் நடிக்க செல்ல முடியும் என்ற நிலையில் நடிகை திரிஷா கால்ஷீட்டுக்காக படக்குழு மட்டுமின்றி நடிகர் மோகன்லாலும் பல நாட்களாக காத்திருக்கிறார்.
ராம் படத்தின் 2ம் பாகத்தில் நடித்த திரிஷா முதல் பாகத்தில் நடிக்க இன்னும் கால்ஷீட் தராமல் இழுத்தடித்து வருகிறார். ஒரு படத்தில் நடிக்க மட்டும் சம்பளம் தந்துவிட்டு படக்குழு 2 படங்களில் நடிக்க திரிஷாவை வற்புறுத்துகிறதா என்றும் தெரியவில்லை. ஆனால் திரிஷாவை பொருத்த வரை கால்ஷீட் விஷயங்களில் எல்லாம் அவர் இதுவரை பிரச்னை செய்ததாக புகார்கள் இல்லை. விஜய்க்காக முதன்முறையாக தி கோட் படத்தில் குத்தாட்டம் போட்டவர் திரிஷா. விஜய் மோகன்லாலில் நெருங்கிய நண்பர் என்பதால் விஜய் சொன்னால் திரிஷா உடனே கால்ஷீட் தந்துவிடுவார் என்று ரசிகர்கள் கிண்டலாக கூறுகின்றனர்.





