தமிழ் சினிமாவில் முன்னாள் நடிகர் இன்றைய முதல்வர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் நேற்று தியேட்டர்களில் ரிலீஸ் ஆனது. இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. நடிகராக இருந்த விஜய் கடைசியாக நடித்த படம் என்பதால் ஒன் இஸ் லாஸ்ட் டைம் என்ற அடிப்படையில் இந்த படத்தை ரசிகர்கள் பார்த்து ரசித்து வருகின்றனர்.
ஓபனிங் ஷோவில் இந்த படத்தை பார்த்து அமைச்சர்கள் சிலர் கண்ணீர் விட்டு கதறி அழுத காட்சி நேற்று இணையத்தில் வைரலானது. அதேபோல் விஜய் ரசிகர்களும் இதுதான் தளபதியின் கடைசி படமா என்றும் அழுது கண்ணீர் விட்டனர். அதேபோல் பகவந்த் கேசரி என்ற தெலுங்கு படத்தை ரீமேக் என்ற பெயரில் எப்படி செய்து விட்டார்களே என்று தெலுங்கு ரசிகர்களும் அழுததாக இணையத்தில் வைரலானது.
இந்த நிலையில் ஜனநாயகன் படத்தில் நான் நடித்த காட்சி ஒன்று கூட இல்லையே என்று அந்த படத்தில் நடித்த டிவி சீரியல் நடிகை ஆனந்தி அழுது கவலையுடன் பதிவு செய்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. டிவி சீரியல் நடிகை ஆனந்தி அவ்வப்போது தமிழ் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற கட்டாக்குஸ்தி 2 படத்தில் ஆனந்தி நடித்திருந்தார். அதேபோல் ஜனநாயகன் படத்தில் அவர் நடித்திருக்கிறார். ஆனால் அவர் நடித்த காட்சிகள் படத்தில் இடம்பெறவில்லை என்று வருத்தமாக ஆனந்தி ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோவில் நடிகை ஆனந்தி கூறியிருப்பதாவது, நான் வந்து நிறைய படங்கள் நடிக்கிறேன். ஆனால் நிறைய எடிட்டிங்கில் அது போய் விடுகிறது.
அதுக்காக நான் வருத்தப்பட்டது இல்லை. ஆனால் ஜனநாயகன் படத்துல நான் நடித்த சீன்ஸ் எல்லாம் எடிட் ஆனது ரொம்பவும் வருத்தமா இருக்கு. நான் திரும்ப நடிக்க வந்தபோது இதுதான் முதல்ல கமிட்டான படம். ஒரு வருஷம் ஒன்றரை வருஷம் இந்த படத்துக்காக காத்திருந்தேன். அதுவும் விஜய் சார் கூட காம்பினேசன். நான் படத்தில் நடிக்க வந்ததற்கு காரணமே விஜய் கூட நடிக்கணும்ன்னு தான். அதுதான் என் கனவாக இருந்தது.
எல்லாரும் வந்து பாருங்க. படம் சூப்பரா இருக்கு. பெண்கள் அதிகாரம் பெறுவது பற்றிய படம் வேற. அடுத்து அவர் படம் நடிச்சாருன்னா நாம ட்ரை பண்ணி நடிக்கலாம். ஆனால் இதுதான் அவருடைய கடைசி படம். ரொம்ப ஹேப்பியா தியேட்டருக்கு போனேன். நம்ம சீன் வரும். தளபதி காம்பினேஷன்ல இருக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனா எடிட் ஆயிடும் என்று எதிர்பார்க்கல. ஃபீல் ஷோ அன்லக்கி இட்ஸ் ஓகே என்று மிகவும் வருத்தமாக அழுதபடி அந்த வீடியோவில் ஆனந்தி பேசியிருக்கிறார்.





