- Advertisement -
Homeபொழுதுபோக்குடிவி சீரியல் நடிகர் நேத்ரன் திடீர் மறைவு, புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்தவர் திடீர் உயிரிழப்பு...

டிவி சீரியல் நடிகர் நேத்ரன் திடீர் மறைவு, புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்தவர் திடீர் உயிரிழப்பு – வேதனையில் சின்னத்திரை வட்டாரம்!

- Advertisement -

சமீபத்தில் நடிகர் டெல்லி கணேஷ் முதுமை காரணமாக உயிரிழந்தார். தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் மிக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றவர். துவக்கத்தில் நாயகனாக, பிறகு பல படங்களில் அண்ணனாக, அரசு அதிகாரியாக, டாக்டராக நடித்த பிறகு கடந்த பல ஆண்டுகளாக ஹீரோ அல்லது ஹீரோயின் அப்பாவாக நடித்தார். முதுமை காரணமாக சில வாரங்களுக்கு முன் மறைந்தார்.

இந்நிலையில் அவரது மறைவை தொடர்ந்து மீண்டும் ஒரு சோகம் நிகழ்ந்துள்ளது. தற்போது டிவி சீரியல் நடிகர் நேத்ரன், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் இறந்தார். இது சின்னத்திரை வட்டாரத்தில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. புற்றுநோய்க்காக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

டிவி சீரியல்களில் பல ஆண்டுகளாக நடித்து வந்தவர் நேத்ரன். டிவி சீரியல் மட்டும் இன்றி பல ரியாலிட்டி ஷோக்களிலும் அவர் பங்கேற்றுள்ளனர். சில படங்களில் துணை கதாபாத்திரங்களில் நேத்ரன் நடித்திருக்கிறார். அந்த வகையில் சினிமா ரசிகர்களுக்கும், சீரியல் ரசிகர்களுக்கும் மிகவும் பரிச்சயமான ஒரு நடிகராகவே அவர் இருந்தார்.

மருதாணி என்ற சீரியல் மூலம் நடிகராக தனது நடிப்பு பயணத்தை தொடங்கிய நேத்ரன் தொடர்ந்து சூப்பர் குடும்பம், முள்ளும் மலரும், வள்ளி, சதிலீலாவதி, உறவுகள் சங்கமம், பாவம் கணேசன் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் வரவேற்பையும், அதிக கவனத்தையும் பெற்றார்.

- Advertisement -

நடிகர் நேத்ரன், டிவி சீரியல்களில் நடித்த போது சக நடிகையான தீபாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். தீபாவும் சீரியல் நடிகை என்பதால் பிஸியாக பல தொடர்களில் அவர் நடித்து வருகிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முன் நேத்ரனுக்கு புற்றுநோய் இருப்பது மருத்துவ பரிசோதனையில் உறுதியானது. இதையறிந்த ரசிகர்கள் கவலைப்பட்டனர். நேத்ரன் புற்றுநோய்க்கு தீவிர சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியானது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேத்ரன் நேற்று உயிரிழந்தார். அவரது மறைவு சின்னத்திரை ரசிகர்களுக்கும், சக சீரியல் நடிகர் நடிகைகளுக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 47 வயதான நிலையில் அவரது திடீர் மறைவு பெரும் சோகத்தை தந்துளளது.

- Advertisement -

சற்று முன்