- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய் புகழ் பாடும் ரீல்ஸ்க்காக மட்டும் மாதம் ரூ. 5 கோடி ஒதுக்கும் தவெக -...

விஜய் புகழ் பாடும் ரீல்ஸ்க்காக மட்டும் மாதம் ரூ. 5 கோடி ஒதுக்கும் தவெக – கசிந்த தகவலால் மிரண்டு போன தமிழக அரசியல் கட்சிகள் – இது உண்மைதானா?

- Advertisement -

கடந்த 100 நாட்களாக தமிழ்நாட்டில் நடந்து வரும் தவெக ஆட்சியை ரியல் ஆட்சி அல்ல, ரீல் ஆட்சி என்றுதான் தமிழக அரசியல் கட்சிகள் விமர்சித்து வருகின்றன. ரீல்ஸ் போட்டு போட்டு மக்களை ஏமாற்றி பொய் பிரசாரம் செய்து ஆட்சிக்கு வந்த கட்சி என்று தவெகவை திமுக முன்னாள் அமைச்சர், தற்போதைய எம்எல்ஏ ரகுபதி சட்டசபையிலேயே நேரடியாக தாக்கிப் பேசியது குறிப்பிடத்தக்கது.

அதே நேரத்தில் ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்த தவெக கட்சிக்கு இப்போது அந்த ரீல்ஸ் வில்லனாக மாறியிருக்கிறது. தவெக தேர்தல் வாக்குறுதிகளில் எல்லாம் தமிழக மக்கள் பலத்த ஏமாற்றங்களை சந்தித்து வரும் நிலையில் திமுக அதிமுகவை விட தவெக பொய் வாக்குறுதிகளை தருவதில் முன்னிலை வகிப்பதாகவும் விஜய் இப்படி ஏமாற்றுவார் என்று தெரியவில்லை என்றும் பலரும் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

- Advertisement -

இந்த நிலையில் ஒரு லேட்டஸ்ட் தகவல் வெளியாகி தமிழக மக்கள் மத்தியிலும் அரசியல் கட்சிகள் மத்தியிலும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. விஜய் தளபதி என்ற பெயர்களில் பரவி வரும் ரீல்ஸ்களில் சொல்லப்பட்டிருக்கும் தகவல்கள் துளியும் உண்மை இல்லை என்றாலும் ஒவ்வொன்றும் குறைந்தது 50 லட்சம் பார்வைகளை அள்ளுகிறது.

விஜய் தளபதி ரீல்ஸ் ஹீரோ நஹி ரியல் ஹீரோ என்று ஒரு பெண் பேசும் வீடியோ மட்டும் 1.4 கோடி பார்வைகளை கடந்து இருக்கிறது. அரியானா உத்தரபிரதேசம் பீகார் மகாராஷ்டிரா மத்திய பிரதேசம் ஜார்கண்ட் மாநிலங்களைச் சேர்ந்த சோசியல் மீடியா இன்ஃப்ளூயன்சர்களை பயன்படுத்தி அந்த வீடியோக்கள் தயாராகின்றன.

- Advertisement -

அதற்காக மட்டும் மாதத்துக்கு 5 கோடி ரூபாய் செலவு செய்யப்படுகிறது. ஒரு சீனியர் அமைச்சர் தான் அதற்கான பொறுப்பை ஏற்று இருக்கிறார் என்றும் பிரபல பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதன் தொடர்ச்சியாக தான் இன்றைய முதல்வர் விஜய், நாளை பிரதமர் விஜய் என்ற கோஷங்களும் சட்டசபையில் சமீபமாக அதிகரித்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

அதாவது தமிழ்நாட்டில் தவெக தான் தமிழகத்தின் எதிர்காலம் என்ற பொய் பிம்பத்தை உருவாக்கி மக்களை ஏமாற்றி ஓட்டுகளை வாங்கி ஜெயித்ததை போல, வடமாநிலங்களிலும் அதே போன்ற யுக்தியை பயன்படுத்தி தவெக தேசிய அரசியல் கட்சியாக உருவாக முயற்சிப்பதாக தெரிய வந்துள்ளது. இதற்காக ரூ. 5 கோடி வரை மாதந்தோறும் ஒரு தவெக அமைச்சர் செலவிடுகிறார் என்றும் அந்த செய்தியில் தகவல் உள்ளது. இது தமிழக அரசியல் கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

சற்று முன்