- Advertisement -
Homeபொழுதுபோக்குவருகிற 2026 சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் சின்னம் இதுவா…? - சூப்பர்...

வருகிற 2026 சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் சின்னம் இதுவா…? – சூப்பர் ஸ்டாருக்கே ரொம்ப பிடிக்குமே… வாவ் என குதூகலித்த ரசிகர்கள்!

- Advertisement -

தமிழ்நாட்டு அரசியல் களத்தில் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கான ஜூரம் இப்பவே ஆரம்பித்து விட்டது. திமுக அதிமுக பாமக பாஜக காங்கிரஸ் தேமுதிக கம்யூனிஸ்ட் கட்சிகள் விடுதலை சிறுத்தைகள் கட்சி என முக்கிய கட்சிகள் அனைத்தும் தேர்தல் வியூகங்களை ஆரம்பித்து விட்டன. இதில் அதிமுக பாஜக கூட்டணி கைகோர்த்திருக்கிறது. திமுக பழைய கூட்டணி அப்படியே நீடிக்கும் என்கிறது.

இதில் அதிக கவனம் பெற்றது நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம்தான். வருகிற சட்டசபை தேர்தலை தனித்து எதிர்கொள்ளும் என்பதுதான் அவர்களது உறுதியான நிலைப்பாடாக இருக்கிறது. ஏனெனில் பாஜகவை பாசிசம் என்று கூறும் விஜய் அதிமுக கூட்டணியில் சேர வாய்ப்பில்லை. பாயாசம் என்று சொல்லும் திமுகவை சேர்ந்த கூட்டணி கட்சிகளும் விஜய் பக்கம் வர வாய்ப்பில்லை.

- Advertisement -

இந்நிலையில் இரட்டை இலை உதயசூரியன் என்ற இரண்டு தேர்தல் சின்னங்கள் மட்டுமே எப்போதுமே சட்டசபை தேர்தல் களத்தில் அனல் பறக்கும் முக்கிய அடையாளங்களாக இருந்து வருகின்றன. தேசிய கட்சிகளாக இருந்தாலும் பாஜக காங்கிரஸ் கட்சிகள் திமுக அல்லது அதிமுக என திராவிட கட்சிகளுடன் இணைந்துதான் தமிழக சட்டசபை தேர்தலை காலம் காலமாக சந்தித்து வருகின்றன.

எம்ஜிஆர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகும் அதிமுகவின் இரட்டை இலை சின்னம் இன்றும் மக்கள் மத்தியில் நிற்கிறது. கருணாநிதி மறைவுக்கு பிறகும் உதயசூரியன் இன்றும் நிலைத்து நிற்கிறது. கட்சி தலைவர்கள் மறைந்தாலும் அந்த கட்சி சின்னங்களுக்கு ஓட்டுப் போடும் மனநிலை மாறாத ஆதரவாளர்களாக பெரும்பாலான வாக்காளர்கள் இருப்பதே அந்த சின்னங்களின் மாபெரும் சக்தியாக உள்ளது. தேர்தல் வெற்றியாக உள்ளது.

- Advertisement -

அதனால் வருகிற 2026 சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தேர்தல் சின்னம் என்ன, விஜயின் கட்சி சின்னம் என்ன என்பதில் மக்கள் மிக ஆர்வமாக இருந்து வருகின்றனர். இதில் நடிகர் விஜயின் கட்சி ஆட்டோ சின்னத்தை தேர்வு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. நட்சத்திரம் அகல்விளக்கு ஆட்டோ என்ற தேர்தல் ஆணையம் தந்த 3 சின்னங்களில் ஆட்டோவை விஜய் டிக் செய்ததாக கூறப்படுகிறது.

வேட்டைக்காரன் படத்தில் விஜய் ஆட்டோ டிரைவராக நடித்திருந்தார். அதே போல் பாட்ஷா படத்தில் மாணிக்கம் கேரக்டரில் ரஜினிகாந்த் ஆட்டோ டிரைவராக நடித்திருந்தார். பாட்ஷா படம் வெளியான நேரத்தில் ரஜினி அரசியலுக்கு வந்தால் ஆட்டோ தான் அவரது தேர்தல் சின்னம் என்றும் பேசப்பட்டது. அதனால் ஆட்டோ சின்னத்தை தனது தேர்தல் சின்னமாக செலக்ட் செய்து முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்திருக்கிறார் தளபதி.

- Advertisement -

சற்று முன்