- Advertisement -
Homeபொழுதுபோக்குஅது எப்படி திமிங்கலம்? தொகுதி பக்கமே பிரசாரம் செய்ய வர விடாம மக்கள் துரத்தி விரட்டி...

அது எப்படி திமிங்கலம்? தொகுதி பக்கமே பிரசாரம் செய்ய வர விடாம மக்கள் துரத்தி விரட்டி அடிச்சாங்க – ஆனா ஆயிரக்கணக்கான ஓட்டு வித்யாசத்துல தவெக வேட்பாளர்கள் ஜெயிச்சாங்க?

- Advertisement -

கடந்த மே மாதம் 10ம் தேதி விஜய் தலைமையிலான தவெக அரசு ஆட்சியமைத்தது. நாளையுடன் 5 மாதங்கள் நிறைவடைய உள்ள நிலையில் விஜய் ஆட்சி மீதும் நிர்வாகம் மீதும் விஜயின் அமைச்சரவை எம்எல்ஏக்கள் மீது மக்களுக்கு கடுமையான அதிருப்தியும் விரக்தியும்தான் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் மேடையில் விஜய் பேசுவதற்கும் முதல்வராக விஜய் எடுக்கும் முடிவுகளுக்கும் சம்பந்தமே இல்லை என்பதுதான் உண்மை.

அதிலும் தூயசக்தி தூயசக்தி என மேடையில் டயலாக் பேசிய விஜய், ஊழல்வாதிகளாக குற்றம் சாட்டப்பட்ட அதிமுக நிர்வாகிகளை எல்லாம் தவெகவில் இணைத்துக்கொண்டது மட்டுமின்றி அவர்களை மாநில பொறுப்புகளில் நியமித்தது இன்னும் அவரது நிலைப்பாட்டை கேள்விக்குறியாக்கியது.

அத்யாவசிய மளிகை பொருட்களின் விலை உயர்வு மின்சார கட்டண உயர்வு மின்தடையால் மக்கள் அவதி தமிழ்நாட்டில் அதிகரித்த சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் இலவச பஸ் பயணத்தால் டாக்ஸி ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் தனியார் பஸ் உரிமையாளர்கள் பாதிப்பு என பல விதமான பிரச்னைகளால் மக்கள் கடும் விரக்தியில் தவெகவை கண்டபடி விமர்சித்து வருகின்றனர்.

இந்த சூழலில் தாராபுரம் மதுராந்தகம் தொகுதிகளில் தவெக சார்பில் இடைத்தேர்தலில் போட்டியிட்ட மரகதம் குமரவேல் மற்றும் சத்யபாமா ஆகிய 2 பேருக்கும் தொகுதி மக்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. தொகுதிக்குள் சென்ற இடம் எல்லாம் துரோகி துரோகி உள்ளே வராதே என்றுதான் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வெளியேற்றினார்.

போலீஸ் பாதுகாப்பின்றி ஒரு தெருவுக்குள் கூட அவர்களால் ஓட்டு கேட்டு போக முடியவில்லை. விஜய் இங்கு பிரசாரத்துக்கு வந்த போது கூட அந்த தொகுதி மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பு ஆதரவு இல்லை. ஆளே இல்லாத கடையில் யாருக்கு டீ ஆத்தறீங்க? என்றுதான் விஜய் பிரசார வேன் சென்ற இடம் எல்லாம் காற்று வாங்கியது. நிச்சயமாக தவெக இடைத்தேர்தலில் தோல்வியை சந்திக்கும் என்றுதான் பலரும் கூறி வந்தனர். அந்த தொகுதி மக்களும் திமுக அல்லது அதிமுகவுக்கு தான் எங்கள் ஓட்டு என்றனர்.

கடந்த பொதுத்தேர்தலிலேயே தவெகவை புறக்கணித்தவர்கள் தான் இந்த 2 தொகுதிகளின் மக்கள். ஆனால் இப்போது ஆயிரக்கணக்கான ஓட்டுகள் வித்யாசத்தில் தவெக வேட்பாளர்கள் வெற்றி பெற்றிருக்கின்றனர். முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல, தொகுதி முழுக்க மக்களின் எதிர்ப்பு, ஆனால் ஆயிரக்கணக்கில் ஓட்டு பதிவானது எப்படி? என்பதுதான் புரியாத புதிராக உள்ளது. ஓட்டுப் போட்ட மக்களை அலட்சியப்படுத்தி விட்டு தவெக பக்கம் தாவிய அவர்களுக்கு மீண்டும் மக்கள் ஆதரவு தந்தார்களா? அது எப்படி திமிங்கலம்? என்று சந்தானம் சந்தேகம் கேட்பது போல் தான் உள்ளது.

சற்று முன்