- Advertisement -
Homeபொழுதுபோக்குஅவர் ஏமாத்துவாரு, இவரும் ஏமாத்தறாரு - முட்டுக் கொடுக்கும் ரசிகர்கள் யோசிப்பார்களா- சினிமா இன்டஸ்ட்ரியில் இப்படியும்...

அவர் ஏமாத்துவாரு, இவரும் ஏமாத்தறாரு – முட்டுக் கொடுக்கும் ரசிகர்கள் யோசிப்பார்களா- சினிமா இன்டஸ்ட்ரியில் இப்படியும் ஒரு டாக்

- Advertisement -

தமிழ் சினிமாவில் எம்ஜிஆர் சிவாஜி, ரஜினி கமல், விஜய் அஜீத் என ஜோடி ஜோடியாக நடிகர்கள், போட்டியாளர்கள் அமைகின்றனர். இந்த வரிசையில் விக்ரம் சூர்யா, தனுஷ் சிம்பு ஜோடிகளும் குறிப்பிடப்படுகின்றனர். நயன்தாரா திரிஷாவை போட்டியாளர்களாக கூறுகின்றனர்.

இந்த வரிசையில் அஜீத் விஜய் ரசிகர்கள் தான் இப்போது உச்சக்கட்டத்தில், மிக அதிக எண்ணிக்கையில் இருக்கின்றனர். இவர்களை பற்றிய தகவல்கள் தான் அடிக்கடி வைரலாகின்றன. இப்போது விஜய் நடித்த லியோ படத்துக்கான ஜூரம், ரசிகர்களை கொதிப்படைய செய்திருக்கிறது. அஜீத்தின் விடாமுயற்சி படப்பிடிப்பும் துவங்குகிறது.

- Advertisement -

லியோ ரிலீஸ் ஆக இன்னும் 18 நாட்களாக உள்ள நிலையில், விஜய் அடுத்த படத்துக்கான வேலைகளில் இறங்கி விட்டார். நாளை, வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் 68 படத்துக்கான பூஜை துவங்குகிறது. வரும் 4ம் தேதி, அஜீத் நடிக்கும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு, வெளிநாட்டில் துவங்குகிறது.

இந்நிலையில், விஜய் அஜீத் இருவரும் தங்களது படங்களில் பிரமோசன் நிகழ்ச்சிகளில் ரசிகர்களை ஏமாற்றடைய செய்வது குறித்து, தமிழ் சினிமாவில் ஒரு பேச்சு அடிபடுகிறது. இதில் நடிகர் அஜீத், நடிகர் விஜய் இருவருமே பிரமோசன் நிகழ்ச்சிகளில் ரசிகர்களை ஏமாற்றவே செய்கின்றனர் என்ற புகார் எழுந்துள்ளது.

- Advertisement -

அதாவது, அஜீத் தனது படங்களுக்கான எந்த பிரமோசன் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பது இல்லை. இதை ஒரு கொள்கையாகவே பின்பற்றி வருகிறார். அவரது கால்ஷீட் கிடைத்தாலே போதும் என நினைக்கும் தயாரிப்பாளர்கள், அவரை அதற்காக வற்புறுத்துவதும் இல்லை. ஆனால், ஒரு கூட்டுமுயற்சி தொழிலாக சினிமா இருப்பதால், தனக்காக இல்லாவிட்டாலும் ரசிகர்களுக்காக, இயக்குநர், தயாரிப்பாளருக்காக பிரமோசன் நிகழ்ச்சியில் அஜீத் பங்கேற்பது மிக முக்கியம். ஆனால், இந்த விஷயத்தில் அவர் ரசிகர்களை ஏமாற்றுகிறார்.

அதே போல், நடிகர் விஜய் பிரமோசன் நிகழ்ச்சியில் பங்கேற்றாலும், ரசிகர்களின் மனம் அறிந்து பேசுவதில்லை. அவரது அரசியல் பயணம் குறித்து அறிந்துகொள்ளவும், அதை விட அவர் நடித்த படத்தை பற்றிய விஷயங்களை தெரிந்துக்கொள்ளவும் ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால், விஜய் நடித்த படங்களில் இசை வெளியீட்டு விழாவில் அரசியலும் பேச மாட்டார். அந்த படம் குறித்தும் எந்த தகவலும் சொல்ல மாட்டார். இதுவும், ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றத்தையே தரும்.

ஆனால் தனது அபிமான நடிகர்கள் இந்த விஷயங்களில் பலத்த ஏமாற்றம் கொடுத்தாலும், தங்களது அபிமான நடிகர் என்ற காரணத்தாலேயே அஜீத், விஜய் ரசிகர்கள் இந்த விஷயத்தை பெரிதுபடுத்தாமல், அவர்களை புகழ் பாடுவதிலேயே நேரத்தை செலவிடுகின்றனர், இப்படி ரசிகர்கள் முட்டுக்கொடுப்பது, சராசரி சினிமா ரசிகர்களை எரிச்சலடையவே செய்கிறது. இதை அந்த நடிகர்களே திருத்திக்கொள்ள முன்வர வேண்டும். அது, தமிழ் சினிமாவின் எதிர்கால வளர்ச்சிக்கு அவர்கள் செய்கிற பேருதவியாக, நன்றியாக அமையும்.

- Advertisement -

சற்று முன்