ஒரு நடிகர் என்றால் அவர் பல இயக்குனர்களிடம் பல கதைகளை கேட்பார். ஆனால் எந்த கதை பிடிக்கிறதோ அந்த கதையில் தனக்காக சில மாற்றங்களை செய்யச் சொல்லி அதில் நடிப்பார். அந்த படம் வெற்றியடைகிறதா? தோல்வியடைகிறதா? என்பது வேறு விஷயம்.

ஆனால் ரஜினிகாந்த் தனக்கு பிடித்த கதை ஒன்றில் நடிக்கத் தயங்கி வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார். அந்த படம் தற்போது அறிவிக்கப்பட்ட 69 ஆவது தேசிய விருது பட்டியலில் சிறந்த படத்திற்கான விருதை வாங்கியுள்ளது. அந்த படம் என்ன படம்? ஏன் அதில் ரஜினிகாந்த் நடிக்கவில்லை என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.
ஒரு இயக்குனர் இயக்கிய இரண்டு திரைப்படங்களைப் பார்த்து வியந்துப்போன ரஜினிகாந்த், அந்த இயக்குனரை வீட்டிற்கே அழைத்து பாராட்டினாராம். அந்த இயக்குனரோ எந்த வித உற்சாகமும் இன்றி மிகவும் சாதுவாக இருந்தாராம். இந்த தன்மை ரஜினிகாந்திற்கு பிடித்துவிட்டதாம். உடனே தனக்காக எதாவது கதை வைத்திருக்கிறீர்களா? என கேட்டிருக்கிறார்.

அதற்கு அந்த இயக்குனர் ஒரு கதையை கூறினாராம். அந்த கதையில் ரஜினிகாந்துக்கான கதாபாத்திரத்தையும் கூறினாராம். அந்த கதாபாத்திரம் ரஜினிக்கு மிகவும் பிடித்துப்போனதாம். ஆனால் அந்த கதாபாத்திரத்தில் நடித்தால் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்பதால் அதில் ரஜினிகாந்த் நடிக்கவில்லையாம்.
இவ்வாறு ரஜினிகாந்த் நடிக்க மறுத்த திரைப்படம்தான் “கடைசி விவசாயி”. இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரத்தைத்தான் ரஜினியிடம் கூறியிருக்கிறார் இயக்குனர் மணிகண்டன். மேலும் அந்த வயதான விவசாயியான நல்லாண்டி கதாபாத்திரத்தையும் ரஜினியிடம் கூறியிருக்கிறார். எனினும் ரஜினிகாந்த் அதில் நடிக்கவில்லை.

“கடைசி விவசாயி” திரைப்படம் சிறந்த தமிழ்ப் படத்திற்கான தேசிய விருதை பெற்றிருக்கிறது. மேலும் இத்திரைப்படத்தில் வயதான விவசாயியாக நடித்திருந்த நல்லாண்டிக்கும் சிறப்பு விருது ஒன்றும் அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.





