நடிகர் விஜய், இன்று தனது 50வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். கள்ளக்குறிச்சி சம்பவம் காரணமாக, தனது பிறந்த நாளை எளிமையாக கொண்டாட தன் ரசிகர்களுக்கு அறிவுறுத்திய நிலையில், பெரிய அளவில் கொண்டாட்டங்கள் இல்லை. சமூக வலைதளங்களில் மட்டுமே, விஜய் ரசிகர்களும், தமிழக வெற்றிக் கழகம் கட்சியினரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், விஜய் குறித்து பலரும் அறியாத 10 விஷயங்கள் லேட்டஸ்ட் தகவலாக வெளியாகி உள்ளது. விஜய் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்திருக்கிறார். வெற்றி, குடும்பம், வசந்தராகம், இது எங்கள் நீதி, நான் சிவப்பு மனிதன் போன்ற படங்களில் நடித்துள்ளார். விவி கிரியேஷன்ஸ் என்பது விஜய் மற்றும் அவரது தங்கை வித்யாவை குறிப்பிடும் வகையில் எஸ்ஏ சந்திரசேகரால் துவங்கப்பட்ட சொந்த தயாரிப்பு நிறுவனம். விஜய் நடித்த ஆதி, நெஞ்சினிலே படங்களை தயாரித்தது இந்த நிறுவனம்தான்.
நடிகர் விஜய், ரஜினியின் மிக தீவிரமான ரசிகர். ரஜினி படங்களை பார்த்து பார்த்துதான், சினிமா ஆர்வத்தை மேலும் வளர்த்துக்கொண்டார். விஜய் வெளிநாடு சென்றபோது, டாம் குரூஸ் பீச் ஹவுஸை பார்த்துவிட்டு, அதே மாதிரி கட்டியதுதான் அவரது நீலாங்கரை வீடு. கடந்த 2007ம் ஆண்டில், எம்ஜிஆர் பல்கலை கழகம் விஜய்க்கு, டாக்டரேட் பட்டம் வழங்கியுள்ளது.
விஜய் நடிக்க துவங்கிய சில ஆண்டுகளில், இளைய தளபதி என அழைக்கப்பட்ட நிலையில், 2015ம் ஆண்டில் வெளியான மெர்சல் படத்தில் இருந்து தளபதி என அழைக்கப்படுகிறார். அந்த படம் வெளியான போது விஜய் வயது 43 கடந்திருந்தது. தனது மனைவி சங்கீதா பெயரில் பாதி (San), தன் பெயரில் பாதி (jay) என தன் மகனுக்கு சஞ்சய் (Sanjay) என பெயரிட்டுள்ளார் விஜய்.
கேரளாவில் மலையாள நடிகர்களுக்கு சமமான ஒரு வரவேற்பும், இமேஜூம் இருப்பது தமிழ் நடிகர்களில் விஜய்க்கு மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. அங்குள்ள மலையாள ஹீரோக்களுக்கு போட்டியாக விஜய் படங்களுக்கு பெரிய அளவில் இமேஜூம், வசூலிலும் சாதிக்கிறது. தமிழகத்தில் ரஜினிக்கு அடுத்தபடியாக ரூ. 100 கோடி வசூல் கிளப்பில் இணைந்தது, விஜய் நடித்த துப்பாக்கி படம் ரூ. 130 கோடி வசூலித்தது
இதுவரை நடிகர் விஜய் இதுவரை 68 படங்களில் நடித்து முடித்திருக்கிறார். இதில் விஜய் தனது சொந்த பெயரில் அதாவது விஜய் என்ற கேரக்டரிலேயே 13 படங்களில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. வழக்கமாக மார்க்கெட் இழந்த நடிகர்கள்தான், அரசியலுக்கு வருவார்கள். ஆனால் ரூ. 200 கோடி சம்பளம் வாங்கும் நிலையில் பெரிய ஸ்டாராக இருக்கும்போதே அரசியலுக்கு வந்துவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.





