இயக்குனர் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான கருப்பு படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றுள்ளது. இந்த படம் வெளியான 2 வாரங்களில் 300 கோடி ரூபாய் வசூலை கடந்திருக்கிறது. அதிகபட்சமாக சிங்கம் 2 படத்துக்கு கிடைத்த ரூ. 160 கோடி வசூல்தான் சூர்யா படங்களில் மிகப் பெரிய வசூலாகும்.
அந்த சாதனையை முறியடித்து கருப்பு படம் 300 கோடி ரூபாய் வசூலை தியேட்டர் வசூலில் மட்டுமே கடந்துள்ளது. கடந்த பல ஆண்டுகளாக ஒரு பிளாக்பஸ்டர் வெற்றிக்காக காத்திருந்த நடிகர் சூர்யாவுக்கு இயக்குனர் ஆர்ஜே பாலாஜி சூப்பரான ஒரு வெற்றியை கொடுத்துள்ளார். இதனால் சூர்யா ரசிகர்கள் ஆர்ஜே பாலாஜியை பாராட்டி வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் இதுவரை 1000 கோடி ரூபாய் வசூலித்த படம் எதுவும் இல்லை. ஆனால் 600 கோடி ரூபாய்க்கு படங்கள் வசூல் நடந்துள்ளது. அதில் தமிழ் சினிமாவில் இதுவரை 300 கோடி ரூபாய் வசூலை கடந்த படங்கள் வரிசை பட்டியலில் நடிகர் சூர்யா நடித்த கருப்பு படமும் இப்போது இணைந்திருக்கிறது.
நடிகர் ஜெயம் ரவி நடித்த பொன்னியின் செல்வன் முதல் பாகம் 488 கோடி 2ம் பாகம் 350 கோடி ரூபாய் வசூலித்தது. நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் 335 கோடி ரூபாய், நடிகர் விஜய் நடித்த பிகில் 302 கோடி ரூபாய் வாரிசு 306 கோடி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் ( தி கோட் ) படம் 455 கோடி ரூபாய் என வசூல் சாதனை படைத்துள்ளது.
அந்த வரிசையில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த எந்திரன் முதல் பாகம் 650 கோடி ரோபோ 2.0 இரண்டாம் பாகம் ரூ. 800 கோடி, ஜெயிலர் 616 கோடி ரூபாய் என வசூலித்துள்ளது. நடிகர் விஜய் நடித்த லியோ 623 கோடி நடிகர் கமல் நடித்த விக்ரம் 414 கோடி நடிகர் ரஜினிகாந்த் நடித்த கூலி 517 கோடி என 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை அள்ளியுள்ளதாக புள்ளி விவர தகவல்கள் கூறுகின்றன.
அதனடிப்படையில் ரஜினி மற்றும் விஜய் அதிக படங்களில் ரூ. 300 கோடிக்கு மேல் கணிசமான வசூலை செய்திருக்கின்றனர். கமல் சிவகார்த்திகேயன் ஜெயம்ரவி படங்கள் சில மட்டுமே அந்த வசூலை கடந்திருக்கின்றன. இப்போது முதன்முறையாக நடிகர் சூர்யாவும் ரூ. 300 கோடி வசூல் நாயகன் என்ற பெருமையை கருப்பு படம் வாயிலாக பெற்று உயர்ந்திருக்கிறார்.





