- Advertisement -
Homeபொழுதுபோக்குரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் 2 படம் ரிலீஸ் தேதி குறித்து வெளியான லேட்டஸ்ட் அப்டேட் -...

ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் 2 படம் ரிலீஸ் தேதி குறித்து வெளியான லேட்டஸ்ட் அப்டேட் – போடு வெடிய என குதூகலித்த சூப்பர் ஸ்டார் ரசிகர்கள்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்படும் உச்ச நடிகராக இருப்பவர் ரஜினிகாந்த். 75 வயதிலும் இன்னும் ஹீரோவாக நடித்துக்கொண்டு இருக்கிறார். கடந்த 1999ம் ஆண்டில் வெளியான படையப்பா படம் ரஜினி பிறந்த நாளில் வெளியாகி சக்கைப்போடு போட்டு வருகிறது. இந்த படம் ரி ரிலீஸ் ஆன நிலையில் 3 நாட்களில் ரூ. 10 கோடிக்கு மேல் வசூலை அள்ளியிருப்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் கூலி. ஆனால் இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை ரசிகர்களிடம் பெறவில்லை. அது மட்டும் இன்றி இந்த படம் மிக மோசமான விமர்சனத்தையும் பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த படம் 600 கோடி ரூபாக்கு மேல் வசூலை குவித்தது. அதற்கு காரணம் இது மாஸ் ஹீரோ ரஜினிகாந்த் நடித்த படம் என்பது மட்டும்தான்.

- Advertisement -

இந்நிலையில் டைரக்டர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இப்போது நடித்து வருகிறார். இந்த படம் கடந்த 2023ம் ஆண்டு வெளியான ஜெயிலர் படத்தின் தொடர்ச்சியாக உருவாகி வருகிறது. அதாவது ஜெயிலர் 2ம் பாகமாக இந்த படம் உருவாகி இருக்கிறது. அனிருத் இசையமைத்துள்ளார்.

மேலும் ஜெயிலர் படத்தின் மாபெரும் வெற்றிக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக மலையாள நடிகர் விநாயகனின் வில்லன் நடிப்பு வேற லெவலில் இருந்தது. எந்தா சாரே…மனசிலாயோ என்று அவர் சுருட்டை பிடித்தபடி மொபைல் போனில் பேசும் டயலாக்குகள் படத்தின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தது. அதனால் ஜெயிலர் 2 படத்திலும் பிளாஷ்பேக் காட்சிகளில் விநாயகன் நடிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

- Advertisement -

ஜெயிலர் படம் கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் 10ம் தேதி வெளியான நிலையில் ஜெயிலர் 2 படத்தையும் வருகிற 2026ம் தேதி ஆகஸ்ட் 14ம் தேதி வெளியிட படக் குழுவும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனமும் திட்டமிட்டு இருப்பதாக ஒரு லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ஆகஸ்ட் மாதம் வெளியானால் ஜெயிலர் போலவே ஜெயிலர் 2 படமும் மாஸ் ஹிட் ஆகும் என்ற சென்டிமென்டும் இதற்கு முக்கிய காரணமாகும்.

ஜெயிலர் 2 படத்தில் ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன் மிர்ணா மேனன் யோகி பாபு எஸ் ஜே சூர்யா மற்றும் தெலுங்கு நடிகர் பாலய்யா கெஸ்ட் ரோலில் பாலிவுட் நடிகை வித்யா பாலன் உள்ளிட்டோரும் நடித்திருக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த மாதத்துடன் நிறைவடைய உள்ள நிலையில் வரும் 2026 ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி இந்த படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்