துணிவு திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் அஜித்குமார் அடுத்ததாக விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இதன் சூட்டிங் அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருகிறது. இதில் அஜித்திற்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். இதுபோக, அர்ஜுன், ரெஜினா, பிக் பாஸ் புகழ் ஆரவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படத்தை, மகிழ் திருமேனி இயக்குகிறார்.
இவர் ஏற்கனவே தடையறத் தாக்க, தடம், மீகாமன், கலகத்தலைவன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். க்ரைம் திரில்லர் படங்களை எடுப்பதில் மகிழ் திருமேனி கைதேர்ந்தவர் என்பதால், விடாமுயற்சி திரைப்படத்திற்கு ஆரம்பத்தில் இருந்தே மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இப்போது வரை படப்பிடிப்பில் நடக்கும் புகைப்படங்கள் எதுவுமே வெளியாகாமல், சஸ்பென்ஸ் ஆக பட குழுவினர் வைத்துள்ளனர்.
படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனமும் இதுவரை விடாமுயற்சி குறித்த எந்த ஒரு அப்டேட்டையும் வெளியிடவில்லை. படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் குறித்து கூட, அந்நிறுவனம் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை. படப்பிடிப்பை முடித்துக் கொண்டு அஜித் மற்றும் அர்ஜுன், ஆரவ் ஆகியோர் வெளியில் எடுக்கும் புகைப்படங்களை வைத்து ரசிகர்கள் இவர்கள் படத்தில் நடித்து வருவதாக கூறி வருகிறார்கள்.
சமீபத்தில் கூட அஜித் மற்றும் ஆரவ் இருவரும் சேர்ந்திருந்த புகைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் அஜித். 63வது திரைப்படமாக உருவாகும் இந்த படத்தினை மைத்திரி நிறுவனம் தயாரிக்கிறது. தெலுங்கின் முன்னணி நிறுவனமான மைத்திரி இந்த திரைப்படத்தின் மூலம் தமிழில் கால் பதிக்கிறது. இந்த படத்திற்காக அஜித்குமார் 300 கோடி ரூபாய் சம்பளம் கேட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடித்த மூத்த பாலிவுட் நடிகை தபு, இது திரைப்படத்தின் மூலம் மீண்டும் அஜித்துடன் இணைவதாக கூறப்படுகிறது. அதற்கான முயற்சியில் ஆதிக் ஈடுபட்டு வருகிறாராம். இதற்கான சூட்டிங் விரைவில் தொடங்கப்படும் என கூறப்படும் நிலையில், இந்த ஆண்டு இறுதிக்குள்ளேயே படம் வெளியாகும் என்று பேசப்படுகிறது.
இந்த நிலையில் அஜித்தின் 64 வது திரைப்படம் குறித்த பேச்சு வார்த்தையும் தற்போது எழுந்துள்ளது. கே ஜி எஃப், சலார் திரைப்படங்களை இயக்கிய பிரசாந்த் நீல்தான் இதற்கான இயக்குனர் என்று கூறப்படுகிறது. கன்னட சினிமாவில் பிரசித்தி பெற்ற ஹோம்பாலே தயாரிப்பு நிறுவனம் தான் இதற்கான முயற்சியில் ஈடுபட்டு உள்ளதாம். இதற்கான முதற்கட்ட பேச்சு வார்த்தைகள் வெற்றிகரமாக முடிந்துள்ள சூழலில், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.





