- Advertisement -
Homeபொழுதுபோக்குஇன்னும் சிறிது நேரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு கோலாகல துவக்கம், கட்டி...

இன்னும் சிறிது நேரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு கோலாகல துவக்கம், கட்டி ஏறுது மக்கள் கூட்டம் – விஜய்க்கு இந்த சென்டிமென்ட் வேற லெவலில் ஒர்க் அவுட் ஆகுதே…?

- Advertisement -

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் நடிகர் விஜய். தளபதி என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் விஜய்க்கு கடந்த சில ஆண்டுகளாகவே சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பும், எதிர்பார்ப்பும் அவரது படங்களுக்கு கிடைத்த பலத்த வெற்றியும், வசூலும் அவரை வேற லெவலில் கொண்டு சென்றது.

இதையடுத்து இன்னும் 20 ஆண்டுகளுக்கு மேல் தமிழ் சினிமாவில் நீடிப்பார் என்று சினிமா ரசிகர்கள், தமிழக மக்கள் எதிர்பார்த்த நிலையில், திடீரென இந்த ஆண்டின் துவக்கத்தில் பிப்ரவரி மாதத்தில் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை விஜய் துவக்கினார். கடந்த ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி கட்சிக்கொடியை அறிமுகப்படுத்தினார். இன்று விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டில் உள்ள விசாலை என்ற கிராமத்தில் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெறுகிறது.

- Advertisement -

விக்கிரவாண்டிக்கு நேற்று மாலை முதலே மக்கள் கூட்டம் மாநாட்டு திடல் பகுதியில் திரண்டது. இப்போது கட்டுக்கடங்காத கூட்டத்தில் மாநாடு பகுதியில் மக்கள் வெள்ளமாக காணப்படுகிறது. இன்னும் கூட்டம் கூட்டமாக மாநாடு திடல் நோக்கி மக்கள் வந்து கொண்டிருக்கின்றனர். மேலும் சாரை சாரையாக மக்கள் கட்சி கொடி ஏந்தி நடந்தும் வந்து கொண்டிருக்கின்றனர்.

மாநாட்டு திடல் பகுதியில் 90 சதவீத இருக்கைகள் நிரம்பிவிட்டன. அந்த பகுதிகளில் போதிய குடிநீர், உணவு வசதி இல்லாமல் மக்கள் தவித்த போதிலும் காலை 6 மணி முதல் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்டுத்தாமல் விஜயின் வருகைக்காக காத்திருக்கின்றனர். இன்னும் சில நிமிடங்களில் நடிகர் விஜய் மேடைக்கு வர உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

இன்று மாலை 6 மணி அளவில் மேடையில் நடிகர் விஜய் பேசுவார் என்றும், 2 மணி நேரத்திற்கு மேல் அவரது முதல் மேடைப்பேச்சு, அரசியல் பேச்சு நீடிக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த மாநாட்டில் தனது கட்சியின் எதிர்கால திட்டங்கள், கொள்கைகள், கோட்பாடுகள், மக்களுக்கான பணிகள் குறித்து விஜய் நீண்ட உரையாற்ற உள்ளார் என்று கூறப்படுகிறது. தற்போது விஜய் மாநாடு திடல் பகுதியில் உள்ள கேரவன் வேனுக்குள் இருக்கிறார் என்றும் இன்னும் சில நிமிடங்களில் அவர் மேடைக்கு வர உள்ளார் என்றும் கூறப்படுகிறது.

விஜய் என்றாலே வெற்றிதான். ஜோசப் விஜய் என்ற இயற்பெயர் கொண்ட விஜய் சினிமாவில் விஜய் என்ற பெயரில் நடித்தார்.ஒரு கட்டத்தில் இளைய தளபதி என்ற பட்டம் அவருக்கு வழங்கப்பட்டது. அதன் பிறகு தளபதி என்று இப்போது ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார். அவரது பெயரில் உள்ள வி சென்டிமென்ட், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள விசாலை கிராமத்தில் என தொடர்ந்து வி என்ற முதல் எழுத்தில் வருகிறது. எல்லாமே வி சென்டிமென்டில் அமைந்திருப்பதால் இந்த கொள்கை திருவிழா மாநாடும் வெற்றிதான் என்று ரசிகர்கள் கொண்டாட்டமாக கூறி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்